ஏரோட்ரோம் குழுக் கூட்டத்தை சென்னை விமான நிலையம் நடத்தியது

டிசம்பர் 13, 2023

2023-ம் ஆண்டிற்கான 2-வது ஏரோட்ரோம் குழுக் கூட்டம் 12.12.2023 அன்று சென்னை விமான நிலையத்தில்நடைபெற்றது. ஏரோட்ரோம் குழுக் கூட்டத்துக்கு உள்துறை சிறப்புச் செயலாளர் திருமதி .சுகந்தி தலைமைவகித்தார்.

பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் பங்கெடுப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில்கலந்துகொண்டனர். விமான நிலையத்தின் தற்செயல் நிகழ்வுகள் குறித்து அறிமுகப்படுத்தவும், அவசரகாலத்திட்டத்தின் இணை நடவடிக்கைகள் குறித்தப் பணிகளைத் தெரிந்துகொள்ளவும், பல்வேறு தரப்பினரும்பின்பற்ற வேண்டிய நிலையான நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், நாட்டிலுள்ள அனைத்து விமானநிலையங்களிலும் ஏரோட்ரோம் குழுக் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.

ஒரு விமானம் கடத்தப்பட்டால், அத்தகைய நிகழ்வைக் கையாள்வதற்கான செயல்திறன் மற்றும் தயார்நிலைகுறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

சென்னை விமான நிலைய இயக்குநர் பொறுப்பு வகிக்கும் திரு கே.கே.ஷோபி, இந்த ஏரோட்ரோம் குழுக்கூட்டத்தை நடத்தினார்.