ஐந்தாவது தமிழ் பக்தர்கள் குழுவினர் காசி தமிழ் சங்கமம்  இரண்டாம் கட்டத்தில் கலந்து கொள்வதற்காகக்  காசியை அடைந்தனர்

புனித நதியானநர்மதாஎனப் பெயரிடப்பட்ட தமிழ் பக்தர்களின் ஐந்தாவது குழுவினர் காசி தமிழ் சங்கமம்இரண்டாம் கட்டத்தில் பங்கேற்பதற்காக திங்களன்று (டிசம்பர் 24, 2023) காசியை அடைந்தனர். தென்னிந்திய விருந்தினர்கள் வாரணாசி வந்து சேர்ந்ததும்  ‘வணக்கம் காசிஎன்ற பெயரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க ஸ்வஸ்திகா பாராயணத்துடன் மலர் தூவி விருந்தினர்கள்  வரவேற்கப்பட்டனர். நர்மதா குழுவைச் சேர்ந்தவர்கள் (விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள்) காசியில் உள்ள பாபா விஸ்வநாதரைவணங்கி, பிரயாக்ராஜ் சங்கம  நீராடலிலும்,   அயோத்தியிலும்  ராம் லாலாவை தரிசனம் செய்யலாம் என்பதில்மகிழ்ச்சியடைவதாகக் கூறினர். இதற்காக அவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

விருந்தினர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்: விருந்தினர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தமிழ்நாடு, உத்தரபிரதேசம் ஆகிய இருமாநிலங்களின் கலை கலாச்சாரத்தைக் காண்பார்கள். இது தவிர, காசி விஸ்வநாதர்  ஆலயம், கால பைரவர்கோயில், சாரநாத், அனுமன் படித்துறை, கங்கா ஆரத்தி மற்றும் பிற இடங்களுக்கும் செல்லும் இந்தக்  குழுவினர் பின்னர் பிரயாக்ராஜுக்கும்  அயோத்திக்கும் செல்வார்கள்.

தென்னிந்திய விருந்தினர்கள்: காசியில் 14 நாட்கள் பயணம் தென்னிந்தியாவின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடைகளையும், காசி மக்கள்  காட்டும் அன்பையும்பாசத்தையும் காசியில் தமிழ் விருந்தினர்கள் கண்டு அனுபவம் கொள்வார்கள். மாணவர்கள் (கங்கை), ஆசிரியர்கள் (யமுனா), தொழில் வல்லுநர்கள் (கோதாவரி), ஆன்மீகவாதிகள் (சரஸ்வதி), விவசாயிகள் மற்றும்கைவினைஞர்கள் (நர்மதா), எழுத்தாளர்கள் (சிந்துவணிகர்கள் மற்றும் வியாபாரிகள் (காவேரி) என   ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் கொண்ட 1400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னை, கோயம்புத்தூர்மற்றும் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குப் பயணம் செய்வார்கள். தமிழ் நாட்காட்டியின்படி, இந்த முறைகாசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டம் மார்கழி மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.