தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மை தலைமை ஆணையராக ஆஷிஷ் வர்மா பொறுப்பேற்றுக் கொண்டார்

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மைதலைமை ஆணையராக திரு ஆஷிஷ் வர்மா 2024 ஜனவரி 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1989-ம்ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய் பணி அதிகாரியான திரு வர்மா, நாடு முழுவதும் உள்ள பல்வேறுசுங்க, மத்திய கலால், சேவை வரி தொடர்பான அமைப்புகளில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆவார்.

வல்சாத், வதோதரா, சூரத், மும்பை, லக்னோ ஔரங்காபாத் மற்றும் புனேவில் பணியாற்றியுள்ளார். லக்னோவில்உள்ள போதைப் பொருள்களின் மத்திய பணியகத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். முதன்மைகூடுதல் தலைமை இயக்குநராக அவர் மும்பையில் உள்ள சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள்தேசிய அகாடமியின் தலைவராக பதவி வகித்துள்ளார். தலைமை ஆணையராக, அவர் மீரட்டில் ஜி.எஸ்.டி மற்றும்மத்திய கலால் வரி மண்டலத்திற்கு தலைமை ஆணையராக பொறுப்பு வகித்துள்ளார்.

லக்னோவிலும், அகமதாபாத்திலும் வருவாய் புலனாய்வு தலைமை இயக்குநரகத்திலும் சிறப்பாகபணியாற்றியுள்ளார். தற்போது சென்னை பணிக்கு முன்னதாக குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு தலைமைஇயக்குநரகத்தில் முதன்மை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். சிறப்பான சேவைக்காக திரு வர்மாகுடியரசுத் தலைவர் விருது பெற்றவர் ஆவார்.