பிரதமரின் பழங்குடியினர் நலன் காக்கும் பெருந்திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு முதல் தவணை நிதியை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி காணொளி வாயிலாக இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மண்வயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைந்த பழங்குடியினருடன் பிரதமர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். பிரதமரின் பழங்குடியினர் நலன்காக்கும் பெருந்திட்டத்தின் பயன்கள் குறித்து பிரதமர் அவர்களிடம் கேட்டறிந்தார். திட்டங்கள் மூலம்தங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாக கூறிய பழங்குடியினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் 50 பயனாளிகளுக்கு 46 லட்சம் மதிப்பில் விவசாயக் கடன்,குடிநீர் இணைப்பு,bமின் இணைப்பு, சாதிச் சான்றிதழ், ஆயுஷ்மன் பாரத் அட்டை மற்றும் 6 பழங்குடியின குழுக்களுக்கு அவர்களது தயாரிப்புகளுக்கான உற்பத்தி நிதி ஆகியவற்றை மத்திய இணையமைச்சர் வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் சுகாதாரத் துறை சார்பில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான பதிவு மற்றும் காசநோய், அரிவாள் செல் ரத்த சோகை நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டன. இவற்றை மத்தியஇணையமைச்சர் ஆய்வு செய்தார். பழங்குடியினர் விவகாரங்கள் துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில்வாழும் பழங்குடியினரின் தயாரிப்புகளின் விற்பனை நிலையம் அமைக்கபட்டது. மேலும் மத்தியநுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் நடமாடும் விற்பனைநிலையம் மூலம் மலிவு விலை பருப்பு, அரிசி, கோதுமை மாவு விற்பனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பிரதமரின் வேண்டுகொளை ஏற்று மண்வயல் பகுதியில் உள்ள சிவன்கோயிலை சுத்தம் செய்து இறைவனை வணங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பழங்குடியினஇளைஞர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு மலைவாழ் மக்களுக்காக 24,000 கோடிசெலவில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அவர்களுக்கான அடிப்படை வசதிகளை அளிக்கும் வகையில் ஜன்மன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததாகவும் இன்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதி அவர்களது வங்கி கணக்கில்செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கூடலூர் பகுதியில் உள்ள மிகவும் பின்தங்கிய நிலையில்உள்ள இருளா, பணியா, காட்டுநாயக்கர் பழங்குடியினர்களுக்கு வீடு கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மிகவும் பின்தங்கியவர்கள் வளர்ச்சி அடைவதே நம் தேசத்தின் வளர்ச்சி என்பதேநமது பிரதமரின் இலக்கு மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்காகவே ஜன்மன்என்ற திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தனது இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரதப் பிரதமர் கலந்து கொண்டுதிருக்குறளை மேற்கோள் காட்டி பொங்கல் வாழ்த்து தெரிவித்ததையும், கடந்த காலங்களில் தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதையும், இரண்டு முறை காசி தமிழ் சங்கத்தையும், ஒருமுறை சௌராஷ்ட்ரா தமிழ்ச்சங்கத்தையும் நடத்தியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு சிறப்புஇருக்கை அமைத்ததாகவும் திருக்குறளை 35 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதாகவும் இதன் மூலம் பிரதமர் தமிழ் மீது கொண்டுள்ள பற்றை நம்மால் அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.