ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, வளர்ச்சி அடைந்த பாரதலட்சியப் விழிப்புணர்வு யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் மேல் மொனவூர், கீழ் மொனவூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மத்திய அரசு திட்டங்கள் குறித்து, வளர்ச்சி அடைந்த பாரத லட்சிய வாகனத்தில் ஒளிபரப்புசெய்யப்பட்டது.
மேலும், வளர்ச்சி அடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளிடையே காணொளி காட்சி வாயிலாக பேசியது, ஒளிபரப்புசெய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொண்ட தகுதியான பயனாளிகளுக்கு மத்திய அரசு திட்டங்களான செல்வமகள் சேமிப்பு திட்டம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா ,ஜன் தன் வங்கி கணக்கு, உள்ளிட்ட பல்வேறுதிட்டங்களின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நல திட்டங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.