புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்களுடன் புத்தம் புதுப்பொலிவுடன் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி டிடி தமிழ் தொலைக்காட்சியாக ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்தெரிவித்துள்ளார்.
டிடி பொதிகை தொலைக்காட்சியை டிடி தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்து, அதில் ஒளிபரப்பாகும் செய்திகள்மற்றும் நிகழ்ச்சிகளை நவீன முறையில் மேம்பட்ட தரத்தில் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பொதிகை (டிடி தமிழ்) தொலைக்காட்சி வளாகத்தில் (19.01.2024) செய்தியாளர்களை சந்தித்தமத்திய அமைச்சர், இன்று மாலை சென்னை வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி கேலோ இந்தியாஇளையோர் விளையாட்டைத் தொடங்கிவைப்பதுடன் டிடி பொதிகையை டிடி தமிழ் தொலைக்காட்சியாகதொடங்கிவைக்கவுள்ளார் என்றார்.
ரூ 40 கோடி செலவில் இந்த தொலைக்காட்சியின் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இவற்றை சிறப்பாக கையாளும் திறன்பெற்ற பொறியாளர்கள் இங்கு உள்ளனர் என்றும் அவர் கூறினார். புத்தம்புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள், ஒளியும் ஒலியும், திரைப்படங்கள், சினிமா நிகழ்ச்சிகள், நடப்பு நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், நடுநிலையான செய்திகளை வழங்கும் தூர்தர்ஷனுக்கு மக்களிடம் என்றுமே தனியிடம் உண்டு என்றும் அதற்கேற்றாற் போல் ஒவ்வொரு மணி நேரமும் செய்திகள் ஒளிபரப்பாகும் என்றும் இவை இனி எச் டிதரத்தில் ஒளிபரப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் நாட்டின் கடைக்கோடியிலுள்ள கிராமங்களுக்கும்சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் 8 மாநிலங்களில் 12 ஆகாசவாணி பண்பலை ஒலிபரப்பு கோபுரங்கள், ஜம்மு–காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் ஒளிபரப்பு கோபுரங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், 12 மாநிலங்களில் 26 பண்பலை ஒலிபரப்பு கோபுரங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார் என்று அமைச்சர்தெரிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவை, ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் ரூ. 2,500 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் எனும் யாத்திரை பிரதமரால் நவம்பர் 15 2023 அன்றுதொடங்கிவைக்கப்பட்டு நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளை மோடி அரசின் உத்தரவாதவாகனம் சென்றடைந்துள்ளதாகவும் மீதமுள்ள கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களையும் இந்த வாகனம் சென்றடைந்து, மத்திய அரசின் திட்டங்களான உஜ்வாலா திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிரதமரின்வீட்டுவசதித் திட்டம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கப்பீட்டுத் திட்டம், பிரதமரின் சாலையோரவியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டம், ட்ரோன்கள்மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் செயல்முறை விளக்கங்கள், வேளாண் கடன் அட்டைகள் போன்றதிட்டங்களில் புதிய பயனாளிகளை இணைக்கும் பணியும், ஆதார் அட்டைகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மற்றும் மலைப்பிரதேசங்களில் அரிவாள் செல் ரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கம், மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருவதாகவும், இதில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மத்திய அரசின் நலத்திட்டஉதவிகளைப் பெற்று பயனடைந்து வருவதாகவும் அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.