பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் குறித்த புகார்கள்அதிகரித்து வருவதால், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல்தலைமைச் செயலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா (23.01.2024) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில், சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுவதற்கு தேசியஅளவிலும், பல்வேறு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாகஆலோசிக்கப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த சுகாதாரத்தின் (One Health) முக்கியத்துவமாகியவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவக்கூடிய நோய்த்தொற்று குறித்து அனைத்துபொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கால்நடை மருத்துவர்களின் பங்கு குறித்தும், இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியினை தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலைக்கழகத்தில் பெற்று திறன்பட செயல்படவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின்துணை வேந்தர் டாக்டர் செல்வகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர்டாக்டர் கமால் உசேன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கால்நடை உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.