மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார். 28 அவசரகால விமான தரையிறங்கு வசதிகள் இந்திய விமானப்படையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு தமிழகத்தில் அமைந்துள்ளன. அசாமில் 5 இடங்களும், மேற்கு வங்கத்தில் 4 இடங்களும், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று இடங்களும், பீகார், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா இரண்டு இடங்களும், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா ஒரு இடமும் இதில் அடங்கும். அவசரகால விமான தரையிறங்கு வசதிகளில் ராணுவ விமானங்களும், தேவை ஏற்படின் பயணிகள் விமானங்களும் தரையிறங்கலாம்.