இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இதுபொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ முத்திரை ), மேலாண்மைத் திட்டச் சான்றிதழ், தங்கம் மற்றும்வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன்மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.இந்திய தர நிர்ணய அமைவனம், இரண்டு நாள் தரநிலைகள் அமைப்புகளுக்கான , பள்ளி/கல்லூரிவழிகாட்டிகள் பயிற்சி நிகழ்ச்சியை இன்று சென்னையில் துவங்கியது. பல்வேறு பள்ளிகள் / கல்லூரிகளைச் சேர்ந்த 50 வழிகாட்டிகள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றார்கள்.
பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி, இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி. பவானி, பிஐஎஸ் வழிகாட்டிகள் பயிற்சித் திட்டத்தை துவக்கி வைத்து, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். அவர் தனது உரையில், ‘’இந்த திட்டத்தின் நோக்கம், மாணவர்களின் வளர்ச்சி மற்றும் தேசிய நலனுக்காகஇளம் தலைமுறையினரின் அணுகுமுறைகளை மறுசீரமைக்கும் நோக்கத்துடன் வழிகாட்டிகளுக்கு விழிப்புணர்வை வழங்குவதாகும்; தரநிலை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் வாழ்க்கைமற்றும் சமூகத்தில் தரநிலைகளின் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்துதல் ; தேசிய மற்றும்சர்வதேச தரங்களின் முக்கியத்துவத்தை செயல்படுத்தவும், தரநிலைப்படுத்தல் பணிகளில் பங்கேற்கஅவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில்துறையில் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கமாணவர்களுக்கு உதவுதல் போன்றவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்” என்றார்.
வழிகாட்டிகள் பயிற்சித் திட்டத்தை விஞ்ஞானி மற்றும் இணை இயக்குநர் திரு ஜீவானந்தம், விஞ்ஞானிமற்றும் துணை இயக்குநர் திரு தினேஷ் ராஜகோபாலன் ஆகியோர் நடத்துவர்.