இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இதுபொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளிநகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும்நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
BIS பல்வேறு தர நிர்ணய மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் தொழில்கள், அரசு, கல்வியாளர்கள் மற்றும்நுகர்வோர்களிடையே தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊக்குவிக்கிறது. மார்ச் 15, 2024 அன்றுஉலக நுகர்வோர் உரிமை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நுகர்வோருக்கு கல்விகற்பிப்பதற்காக, BIS நுகர்வோருடன் நேரடி இணைப்பு பயன்முறையில் ஈடுபடுவதற்கான தர இணைப்புபிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மானக் மித்ரா என்று அழைக்கப்படும் இளைஞர் தன்னார்வலர்களின்நெட்வொர்க் மூலம் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மானக் மித்ரா குறைந்தது 25 இளைஞர்களுடன் விரிவாக உரையாடுவார். BIS செயல்பாடுகள், நுகர்வோர் பாதுகாப்பில் BIS இன் பங்குபற்றிய தகவல்களை மாணவர்கள், இளைஞர்களுடன்பகிர்ந்து கொள்வார். இதன் மூலம், இந்திய தரநிர்ணயத் திட்டத்தின் பயன்களையும் பலன்களையும் பயன்படுத்திக் கொள்ளவும், பல்வேறு அம்சங்களைதேவைக்கேற்ப பரிச்சயத்துடனும், எளிதாகவும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இந்த இயக்கத்தைவெற்றிகரமாக முடித்ததற்காக ஒவ்வொரு மானக் மித்ராவுக்கும் மதிப்பூதியம் ரூ .1500/- வழங்கப்படும்.
அதன்படி, சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி ஆகியவற்றைச் சேர்ந்த 380 மாணவர்களுக்கு (மானக் மித்ரா) இளைஞர்கள் இடையேயானதரம் குறித்த பிரச்சாரத்திற்கான பயிற்சித் திட்டத்தை இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளைஅலுவலகம் நடத்தியது. இதற்கான பயிற்சி நிகழ்ச்சியய் திரு யு.எஸ்.பி. யாதவ், துணை தலைமைஇயக்குநர், தென் மண்டல அலுவலகம், இந்திய தர நிர்ணய அமைவனம் மற்றும் திரு கௌதம் பி.ஜே., இணை இயக்குநர், சென்னை கிளை அலுவலகம் ஆகியோர் நடத்தினர். பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு திரு. யு.எஸ்.பி. யாதவ், துணை இயக்குநர் ஜெனரல் தென் மண்டல அலுவலகம், இந்திய தர நிர்ணயஅமைவதும் கொடியேற்றி நிகழ்வை துவக்கி வைத்தார். BIS சார்பாக பல்கலைக்கழகம் தர இணைப்புபிரச்சாரத்தை மேற்கொள்ளும். இந்த மானக் மித்ராக்கள் இளைஞர்களுடன் விரிவாக BIS செயல்பாடுகள்மற்றும் BIS Care செயலியின் பயன்பாடு பற்றிய தகவல்களை சாதாரண நுகர்வோருக்கு பகிர்ந்துகொள்வார்கள்.
ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட பொருட்கள் , பிஐஎஸ் பதிவு முத்திரையிடப்பட்ட தயாரிப்புகள் மற்றும்பிஐஎஸ் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அனைத்துவாடிக்கையாளர்களும் BIS Care செயலியைப் பயன்படுத்துமாறு பிஐஎஸ் கேட்டுக்கொள்கிறது.