உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்திய தர நிர்ணய அமைவனம்  சார்பில் “மானக் மஹோத்சவ்” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி..எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும்பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கானதர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப்பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பைநோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதிஉலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தைநினைவுகூரும் வகையில், BISன் மானக் மஹோத்சவ் நிகழ்ச்சி இன்று, 15 மார்ச் 2024 நடைபெற்றது

ஸ்ரீ ஹர் சஹாய் மீனா, ..., ; தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலாளர் / ஆணையர், மானக் மஹோத்சவ்வின்   தலைமை விருந்தினராக  கலந்துகொண்டார். இந்த ஆண்டு நுகர்வோர் உரிமைகள் தினத்திற்கான தொனிப்பொருள் குறித்து அவர் தனதுஉரையின் போது தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகள் குறித்து ஒவ்வொரு நுகர்வோரும் விழிப்புணர்வுடன்இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குடிமைப் பொருள் வழங்கல் துறையின் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு BIS பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். தேவைப்பட்டால், குடிமக்கள்வழங்கல் துறையின் குடிமக்கள் நுகர்வோர் சங்கங்கள் மற்றும் BIS இன் தரநிலைகள் கிளப்களைஇணைக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

திருமதி.மீனாட்சி கணேசன், அறிவியலாளர் & தலைவர் (தென் மண்டல ஆய்வகம்), தனது உரையில்நுகர்வோருக்கான பல்வேறு உரிமைகள் பற்றித் தெரிவித்தார், மேலும் தமிழ்நாட்டில் நுகர்வோர் தீர்வுவழிமுறைகளைப் பாராட்டினார்.

ஸ்ரீமதி.ஜி.பவானி, அறிவியலாளர்/இயக்குனர் மற்றும் தலைவர் (சென்னை கிளை அலுவலகம்)  தனது உரையில், உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, BIS சென்னை கிளை அலுவலகம் இந்த மாதத்தில் தரஇணைப்புத் திட்டம் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. என்றும் இதன் மூலம் பள்ளி/கல்லூரிமாணவர்கள் இளைஞர்களை சந்திக்கின்றனர் மற்றும் தரம், தரநிலைகள் மற்றும் BIS கேர் ஆப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்றும் , பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கார்பேரணியும் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அடிமட்ட அளவில் தரம் மற்றும் தர விழிப்புணர்வு செய்திகளை எடுத்துச் சென்றதற்காக இந்திய தர நிர்ணய அமைப்புக்கு பங்களிப்பு செய்த 9 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

BIS ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காகமானக் மந்தன்என்ற தலைப்பில் புதிய தொடர்கலந்துரையாடல்  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது, தொழில்துறை மற்றும் வர்த்தகஅமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகையதயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு  புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர்உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான திருத்தங்கள்  மற்றும் பரவலான புழக்க வரைவுகளைப் பகிரவும்திட்டமிடப்பட்டுள்ளது

இன்றய மானக் மஹோத்சவ் நிகழ்வில்  “IS 7466:2023 பிரஷர் குக்கருக்கான ரப்பர் கேஸ்கட்என்றதலைப்பில்  மானக் மந்தன் நடைபெற்றது. ரப்பர் கேஸ்கட்கள் பிரஷர் குக்கர்களின் ஒருங்கிணைந்த கூறுகளாகும், அவை சரியான சீல் மற்றும் சமையலை உறுதி செய்வதற்கு முக்கியமானவை. பிரஷர் குக்கர்கள்அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் கீழ் இயங்குவதால், கேஸ்கட்களில் பயன்படுத்தப்படும் ரப்பரின் தரம்மிக முக்கியமானது. பிரஷர் குக்கர்களுடன் பயன்படுத்தப்பட வேண்டிய ரப்பர் கேஸ்கட்களின் தரம் மற்றும்பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், இந்திய தர நிர்ணய அமைவனம்  பிரஷர்குக்கர்களுக்கான ரப்பர் கேஸ்கட்களுக்கான இந்திய தரத்தை உருவாக்கியுள்ளது, அதாவது IS 7466:2023. மூலப்பொருள் விவரக்குறிப்புகள், பரிமாணத் தேவைகள், செயல்திறன் சோதனை, தரக் கட்டுப்பாடு, லேபிளிங்மற்றும் இணக்க நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரஷர் குக்கர்களுடன் பயன்படுத்தப்படவேண்டிய ரப்பர் கேஸ்கட்களுக்கான தேவைகளை இந்த தரநிலை கோடிட்டுக் காட்டுகிறது. இது கேஸ்கட்ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது, நுகர்வோர் நம்பிக்கை மற்றும்தொழில்துறையில் தயாரிப்பு தரத்தை மேம்படுத்துகிறது.

திரு ஜீவானந்தம், விஞ்ஞானிடி. திரு  பிஜே கவுதம், விஞ்ஞானிடி மற்றும் திரு  முகுந்தன் ரகுநாதன், விஞ்ஞானிடி  ஆகியோர் இந்த மானக் மந்தன் நிகழ்ச்சியை நடத்தினர்.