BIS சட்டம் 2016 ஐ மீறியதாக சந்தேகிக்கப்படும் தகவலின் பேரில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, 22-03-2024, மதியம் தாம்பரம் அருகே உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் அமலாக்கத் தேடல் மற்றும் பறிமுதல் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போது BIS அதிகாரிகள் குழு ஸ்ரீ. ஸ்ரீஜித் மோகன் – இணை இயக்குநர், திரு. தினேஷ்ராஜகோபாலன் துணை இயக்குநர் மற்றும் பணியாளர்கள், BIS சட்டம் 2016 இன் பிரிவு 28 இன் படி, நிறுவனம்போலி ISI முத்திரை குறிக்கப்பட்ட லேபிள்களைக் கொண்ட போலியான ISI முத்திரை குறியிடப்பட்ட பிவிசிஎலக்ட்ரிக்கல் இன்சுலேஷன் டேப் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. போலியான ISI முத்திரையுடன்குறிக்கப்பட்ட 16400 எண்ணிக்கையிலான , CM/L-7800028215 உரிமை எண் கொண்ட பல பிராண்ட்பெயர்களைக் கொண்ட PVC மின் காப்பு நாடாக்கள், தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் போதுகைப்பற்றப்பட்டன.
குற்றவாளிகள் மீது இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016-ன் கீழ் பி.ஐ.எஸ் மூலம் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று சென்னை கிளை அலுவலகத் தலைவர் திருமதி ஜி.பவானி தெரிவித்தார். இந்தக்குற்றத்திற்கு, முதல் மீறலுக்கு BIS சட்டம், 2016 இன் பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் வரைசிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000/- ற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும்பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் அல்லது ஒட்டப்படும் அல்லது பொருட்களின் மதிப்பில் பத்துமடங்கு வரை நீட்டிக்கப்படலாம்.
எனவே, பொது மக்கள், BIS CARE செயலியைப் பயன்படுத்தி BIS தரக் குறியிடப்பட்ட பொருட்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் அவர்கள் ISI முத்திரையைதவறாகப் பயன்படுத்துவதைக் கண்டால், BIS சென்னை கிளை அலுவலகம், CIT வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 க்கு தகவல் தெரிவிக்கலாம்.
BIS Care செயலியைப் பயன்படுத்துவதன் மூலமும் அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குமின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் இத்தகைய புகார்களைச் செய்யலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம்கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களுக்கு உதவும்.