சென்னையில் உள்ள வருமான வரித்துறையின் கூடுதல்ஆணையரகம், டிடிஎஸ் சரகம் -3, தமிழ் சேம்பேர் ஆப்காமெர்ஸ் இணைந்து வருமானவரி வரிப்பிடித்தம் குறித்தவிழிப்புணர்வு கருத்தரங்கை சென்னையில்நடத்தின..வரிப்பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் திரு எம்அர்ஜுன் மானிக் வழிகாட்டுதலின் கீழ், 2024, ஜூலை 5 அன்று நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தில் தமிழ்சேம்பேர் ஆப் காமெர்ஸ் தலைவர் திரு சோழ நாச்சியார்ராஜசேகர் வரவேற்புரை ஆற்றினார். வருமானவரி அலுவலர்கள் திரு ராஜாராமன், திரு தீபன்குமார், திரு செந்தில் குமார் ஆகியோர், வருமானவரிபிடித்த விதிகள், வருமானவரிப் பிடித்தம் செய்பவர்களின்கடமைகள், பொறுப்புகள், ஒருவேவேளை வரிப்பிடித்தவிதிகளை முறையாகப் பின்பற்றவில்லை எனில் எழும்சிக்கல்கள் குறித்து விளக்கினர் வரிபிடித்த ஆலோசகர் திருமதி ஜானகி கார்த்திகேயன்,ட்ரேசஸ் (TRACES) தளம் மூலம் வருமான வரிப்பிடித்தம்செய்பவர்கள் மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகள்குறித்து விளக்கினார். ரவிக்குமார் டேவிட் நன்றி கூறினார்
இந்த கருத்தரங்கித்தில், வருமான வரிப்பிடித்தம்செய்பவர்களின் நலன் கருதி, சென்னையில் உள்ளவருமானவரித்துறை மேற்கொண்ட பல்வேறுநடவடிக்கைகள், வரிப்பிடித்தம் செய்பவர்களின்கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
1. வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான வழிகாட்டும்துண்டுப் பிரசுரங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணினிவழி நகல் வழங்கப்பட்டது
2. வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான வழிகாட்டும்கையேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணினி வழி நகல்வழங்கப்பட்டது
3. வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கு வழிகாட்டும்ட்ரேசஸ் (TRACES) தளத்தில் எழும் பல்வேறுசிக்கல்களுக்குத்த தீர்வாக , பல்வேறு தலைப்புகளின்கீழ் , வருமானவரித்துறையின், அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் வெளியானது.