சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர் ரவீந்திர கெட்டு-க்கு ரைலம் என்ற கட்டுமானப் பொருட்கள், அமைப்புகள், கட்டமைப்புகளுக்கான ஆய்வகங்கள் மற்றும் நிபுணர்களின் சர்வதேச கூட்டமைப்பின் ‘கௌரவ உறுப்பினர்’ என்ற உயரிய அங்கீகாரம் கிடைதுள்ளது. 2018-21ம் ஆண்டுகளில் இந்த அமைப்பின் தலைவராக பேராசிரியர் ரவீந்திர கெட்டு பதவி வகித்தார். இதன் 78 ஆண்டுகால வரலாற்றில் ஆசியாவில் இருந்து முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இதே அமைப்பின் துணைத் தலைவராகவும், உலகெங்கும் உள்ள கட்டுமானப் பொருட்கள் குறித்த ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப செயல்பாடுகள் குழுவின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.‘ரைலம்’ அளித்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்து பேராசிரியர் ரவீந்திர கெட்டு கூறுகையில்,“கட்டுமானத் துறை உலகளாவிய தாக்கத்தைக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், கட்டுமானப்பொருட்களுக்கான ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய உலகின் மிக முக்கிய நிறுவனத்தைவழிநடத்தும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.