தென்னிந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார விழாவான ஃபெஸ்டம்பரின் பொன்விழாவைக் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஃபெஸ்டெம்பர் 50 வயதை எட்டுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளியிலுள்ள டெக்கான் ஒடிஸியில் பயணம் செய்து, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை முன்னெப்போதும் கண்டிராத வகையில் கொண்டாட வருகின்றனர். நடக்கவுள்ள போட்டிகள் முதல் பிரமாண்டமான நிகழ்ச்சிகள் வரை, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரங்கை ஃபெஸ்டெம்பர் கொண்டுள்ளது. ஃபெஸ்டம்பரின் தொடக்க விழா, இயக்குநர் ஜி அகிலா மற்றும் பெஸ்டம்பரின் நிறுவனக் குழுவைச் சேர்ந்த டாக்டர் குருமூர்த்தி கல்யாணராம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஃபெஸ்டம்பரின் முக்கியத்துவத்தைப் பற்றியும் ஃபெஸ்டம்பரின் தாக்கத்தைப் பற்றியும் டாக்டர் குருமூர்த்தி கல்யாணராம் கூறினார். அவர்கள் தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளியின் மதிப்புகள், பண்புகள் மற்றும் இப்பண்புகள் கல்லூரி வளாகத்தில் ஃபெஸ்டெம்பர் கொண்டு வரும் தாக்கத்தை எவ்வாறு மேம்படுத்தியது என்பதைப் பற்றி விவாதித்தனர். இவ்வைம்பதாவது பதிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஓர் ஏக்க உணர்வை ஏற்படுத்தியுள்ளது. விளக்கு ஏற்றும் விழாவில் ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, இயக்குநர், ஆசிரிய ஆலோசகர்கள் கலந்துகொண்ட திறப்பு விழா நிறைவடைந்தது. தலைமை விருந்தினராக திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (எல்&ஓ) திரு எஸ் செல்வக்குமார் கலந்து கொண்டு, பாதுகாப்பு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார். விழா வெற்றிபெற அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஃபெஸ்டம்பர் 24 – விழாவின் தொடக்க நாளை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஃபெஸ்டம்பரைத் தொடங்குவதற்கும், மாபெரும் திறப்பு விழாவைக் கொண்டுவருவதற்கும் தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளியின் இசைக் குழு மற்றும் நடனக் குழு இரவும் பகலும் அயராது உழைத்திருந்தனர். இசைக் குழுவின் மெல்லிசை மற்றும் ஒத்திசைவான இசை கேட்பதற்குக் காதிற்கினிமையாக அமைந்தது. நடனக் குழுவும் ஒரு அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினர். ஃபெஸ்டம்பரின் 0 ஆம் நாள் முடிவடையும் போது, நாங்கள் விழா முழுவதும் முன்னோக்கிச் செல்வதற்கான அற்புதமான நினைவுகளுடன் எஞ்சியுள்ளோம். சந்தேகமின்றி, டெக்கன் ஓடிசி பயணம் உங்களை பரவசத்துடன் மெய்சிலிர்க்க வைத்திருக்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.