தாவரங்கள் மனித குலத்திற்கு மிகவும் முக்கியமானவை. அவைநமது நீண்ட கால உயிர்வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானஆதாரங்களாகும். உணவு, மருந்து, சுத்திகரிக்கப்பட்ட காற்றுமற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கு நாம் அவற்றைநம்பியிருப்பது மட்டுமல்லாமல், மரங்கள் சுற்றுச்சூழலைப்பாதுகாக்கிறது; புவி வெப்பமடைதலில் இருந்து நம்மைக்காக்கிறது; தண்ணீரைப் பாதுகாக்கிறது, மண்ணைப்பாதுகாக்கிறது மற்றும் காலநிலை மாற்றங்களைக்கட்டுப்படுத்துகிறது.
இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை அலுவலகம், உலக தர நிர்ணய நாள் 2024-ன் ஒரு பகுதியாக, எக்ஸ்னோராஇன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து,இன்று சென்னைதிருமுடிவாக்கம் ஸ்ரீ சாந்தி ஆனந்த் வித்யாலயாவில்மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வின் போது, ஸ்ரீமதி பவானி,மூத்த இயக்குநர் மற்றும்தலைவர் -பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், பங்கேற்பாளர்களை வரவேற்று, உலக தர நிர்ணய தினத்தின்கருப்பொருள் – “ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்டபார்வை: நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள்(SDGs)” என்று தெரிவித்தார். இந்த உலகில் வசிப்பவர்கள்பசுமையான மற்றும் அழகான பூமிக்கு பங்களிக்கத்தொடங்குவதற்கான முக்கிய நேரம் இது என்பதைவலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் திருமுதலிவாக்கம் ஸ்ரீ சாந்தி ஆனந்த்வித்யாலயாவின் தலைவர் திரு விவேகானந்த் ஆறுமுகம் சிறப்புஉரையாற்ற, ஹோம் எக்ஸ்நோரா தலைவர் திரு எஸ்இந்திரகுமார் உரையாற்றினார். மரக்கன்றுகளை நடுவது,சூழலியல் பிரச்சினைகளை தீர்க்க உதவும் என இருபேச்சாளர்களும் வலியுறுத்தினர். மேலும், அவை சீரழிந்தசுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், உணவு,மருந்துகளை உற்பத்தி செய்யவும், சுற்றுச்சூழல் மற்றும்பொருளாதார நன்மைகளை வழங்குவதாகவும், காடுகளுக்குவெளியே உள்ள மரங்கள்,சீரழிவைக் குறைப்பதில் அதிக பங்குவகிப்பதோடு, நிலையான வளர்ச்சிக்கு உதவும் என்றும்குறிப்பிட்டனர்.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) என்பது மத்தியஅரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகஅமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வமானஅமைப்பாகும். இது உற்பத்தி சான்றிதழ் (ISI Mark), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளிநகைகள், கலைப்பொருட்கள் மற்றும் ஆய்வக சேவைகளின்ஹால் மார்க்கிங் போன்ற பல்வேறு திட்டங்களைதொழில்துறையின் நலனுக்காகவும் அதையொட்டி நகர்வோர்பாதுகாப்பை நோக்கமாகவும் செயல்படுத்தி வருகிறது.