காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இரண்டு நாள் “கலாச்சார விழா (Leciel 2024-25)” கல்லூரிவளாகத்திலுள்ள கி. ரா அரங்கத்தில் இன்று (25.10.2024) காலை தொடங்கியது. இக்கலாச்சார விழாவினை இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் பாரம்பரிய குத்துவிளக்கேற்றும் விழாவுடன் தொடங்கி வைத்தார். கலாச்சார பரிமாற்றத்தைவளர்ப்பதற்கும், மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் சிறந்த களமாகஇக்கலாச்சாரவிழா அமையும் என்று அவர் கூறினார். முன்னதாக இக்கலாச்சார விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் கலாச்சார குழுவின்தலைவர் முனைவர் டாக்டர் என். செந்தில் குமார், இரண்டு நாட்கள் இக்கலாச்சார விழாவில் நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்ச்சியின் தொகுப்பை வெளியிட்டார்.
இக்கலாச்சார விழாவில் காரைக்கால், புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த 50க்கும்மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இக்கலாச்சார விழாவில் இசைக் கச்சேரிகள், நடனப் போட்டிகள், கலைக் கண்காட்சிகள், இலக்கிய நிகழ்வுகள், பேஷன் ஷோக்கள், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு உற்சாகமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.