உலர் பழங்கள் கலவையைக் கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு

சென்னையில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் சார்பில் (ஐஎச்எம்), மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களின் துடிப்பான மற்றும் உற்சாகமான பங்கேற்பைக் காண்பிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான பண்டிகை நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.  அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவம்பர் மாதம் பழக் கலவையைக் கொண்டு கேக் தயாரிக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. உலர் பழங்கள், கொட்டைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுகிறது. இதையடுத்து 2024 நவம்பர் 13, அன்று பிரமாண்டமான ‘பழம் கலவை விழா’ என்னும் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி பல்வேறு ஹோட்டல்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல்காரர்கள் மற்றும் புகழ்பெற்ற பழைய மாணவர்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

இந்த பாரம்பரியமிக்க நிகழ்ச்சியில் ஹோட்டல் ஆலோசகர் வெங்கடேஷ் ரெட்டி, உணவு ஆலோசகர் – சமையல் கலைஞர் கௌஷிக், ரைட்டர்ஸ் கஃபே சமையல் கலைஞர் பூபேஷ், பிரேம்ஸ் கிராமிய உணவு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, உணவு ஆலோசகர்  ஹர்ஷா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அத்துடன் முன்னாள் மாணவர்களான தொழில் முனைவோர்  ஆண்டவன் கதிர், சென்னை ஹோட்டல் மேலாண்மை நிறுவன முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் பிபின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.