இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் தணிக்கை வார விழாவின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர். ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம் குறித்து அவர் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் முதன்மை மாநில கணக்காயர்கள் அனிம் செரியன், ஆர். அம்பலவாணன், கே.பி.ஆனந்த், ஆர். திருப்பதி வெங்கடசாமி, டி.ஜெய்சங்கர், எஸ். வெள்ளியங்கிரி ஆகியோர் பங்கேற்றனர்.