ஊழியர்களுக்கான விழிப்புணர்வு வாரம் திருச்சியில் நடைபெற்றது

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரம், அஞ்சல் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தை முன்னிட்டு, மத்திய அஞ்சல் மண்டலம் சார்பில், அஞ்சல் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி  அறிவுறுத்தலின் படி, மண்டல அளவிலான பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் – 2013 குறித்து, திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கலந்து கொண்டு பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் குறித்து ஊழியர்களிடையே விழிப்புணர்வு உரை ஆற்றினார். மேலும் மத்திய மண்டல உதவி கண்காணிப்பாளர் லியோ ஜெசுராஜன், அரவக்குறிச்சா அஞ்சல் ஆய்வாளர் ரேவதி சட்டம்  குறித்து விளக்க உரை அளித்தனர். இதில் திருச்சி மற்றும் ஶ்ரீரங்கம் அஞ்சல் கோட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி கோட்ட முதுநிலை கண்கணிப்பாளர் தங்கமணி, திருச்சி மண்டல அலுவலக உதவி இயக்குனர் ஜோஸ்பின் சில்வியா மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட கண்காணிப்பாளர் ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.