முகமற்ற மதிப்பீடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை நுங்கம்பாக்கம், எம்.ஜி சாலையில் உள்ளவருமான வரி அலுவலகத்தில் 28.01.2025 அன்று ஆன்லைன் மதிப்பீடு, ஆன்லைன் மேல்முறையீடுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை – 3 & 4 வருமான வரித் துறைதலைமை ஆணையர் டாக்டர் டி. சுதாகர ராவ்தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள வருமான வரித்துறையின் முதன்மை விருந்தினராக தலைமை  ஆணையர் திருமதி ஜஹான்சீப் அக்தர் கலந்து கொண்டார்.

“ஃபேஸ்லெஸ்” என்ற பிரபலமான பெயரில் அழைக்கப்படும் வருமான வரித் துறையின் உயர் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செயல்பாட்டை,மேம்படுத்தவும், செம்மைப்படுத்தவும், வரி செலுத்துவோருக்கு எளிதான நடைமுறைகளை உருவாக்கவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வெளிப்படைத் தன்மையுடன் கூடிய செயல்பாடுகளை சீரமைக்கவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. முகமற்ற மதிப்பீடு மற்றும் மேல்முறையீட்டு அலகுகளில் பணியமர்த்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து அவர்களின் பிரச்சினைகள், முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. வரி செலுத்துவோர், பட்டயக் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், வர்த்தகசபை, வர்த்தக அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்பினருடன்  நடைபெற்ற அமர்வில் முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளுடன் முகமற்ற செயல்முறைகள் குறித்த அவர்களின் அனுபவமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஜஹான்சீப் அக்தர், வருமான வரித் துறையின் முகமற்ற மதிப்பீடு தொடர்பான செயல்திட்ட  மாதிரியை தரவு அடிப்படையிலான வரி நிர்வாகத்தில் உலகின் தலைசிறந்த நடைமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.