சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது

தொலைதூரம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், பிப்ரவரி 03-ம் தேதி  நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி சென்னை பிராந்திய கடப்பிதழ் அதிகாரி எஸ்.விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது.  இந்த முயற்சி நீண்ட தூரம் பயணிக்கும் தனிநபர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை எளிதாக அணுக உதவுகிறது. மேலும், இத்தகைய திட்டங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கடப்பிதழ்  சேவைகள் நடைமுறைகள் மற்றும் அடையாள ஆவணமாக கடப்பிதழை வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி, கடப்பிதழ் விண்ணப்பங்களை முகாம் முறையில் செயல்படுத்தும்.  கோயம்புத்தூர் மண்டல கடப்பிதழ் அலுவலகத்துக்கு பிறகு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தியை பெறும் தமிழ்நாட்டின் இரண்டாவது கடப்பிதழ் அலுவலகம் சென்னை மண்டல அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது.