பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது

டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களின் போது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மதிப்புமிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்பை ஊக்குவிப்பதற்கான பர்ஸ் விருதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம். கிருஷ்ணன் விருதைப் பெற்றுக் கொண்டார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல், தொழில்நுட்பத் துறை, தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டங்களை புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. “வளர்ச்சியடைந்தபாரதத்திற்கான அறிவியல் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கு இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.  தேசிய அறிவியல் தினத்தை புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்வு, வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அறிவியல் ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும், அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது