புதுச்சேரி முதல்வரை BIS பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்தது தரநிலைகள் மற்றும் தரம் குறித்த முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன 

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை கிளை அலுவலக பிரதிநிதிகள் குழு [ BIS அதிகாரிகள்,தொழில்துறை, கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு]  புதுச்சேரி முதல்வர் ஸ்ரீ ரங்கசாமியை 16.03.25 அன்று புதுச்சேரியில் சந்தித்தது. புதுச்சேரி யூனியன் பிரதேச கொள்முதல் கொள்கையில் இந்திய தரநிலைகளின் பயன்பாட்டை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன்; மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் MSME துறைகள் காப்ஸ்யூல் படிப்புகளை நடத்துவதில் BIS உடனான ஒத்துழைப்பு வேண்டியும், BIS கேர்  செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், தரநிலைகளைப் பயன்படுத்தி அரசு துறைகள் / திட்டங்களை அங்கீகரிக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுத்தவும் வேண்டி இந்த சந்திப்பு நடைபெற்றது.

 BIS பிரதிநிதிகள் குழுவில் MRF டயர்ஸ், வேர்ல்பூல் இந்தியா லிமிடெட், சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ்,மாருதி டெஸ்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், உரிமதாரர்கள் மற்றும் BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களின் பிரதிநிதிகள் இருந்தனர். BIS தரப்பிலிருந்து திருமதி. G. பவானி, விஞ்ஞானி-F & தலைவர் (சென்னை கிளை)  மற்றும் G வெங்கடநாராயணன்  விஞ்ஞானி-E, மேலாண்மை சான்றிதழ்  துறை ஆகியோர் இருந்தனர். உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது, மேலும் சென்னை கிளை அலுவலகத்திற்கு BIS பற்றிய சான்று காணொளியை வழங்கியதற்காக அவருக்கு மிகுந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் தர உத்தரவாதத்துடன் கூடிய பொருட்கள் இருக்கும் வகையில் தரநிலை குறிக்கப்பட்ட பொருட்களை வலியுறுத்துமாறு தனது துறைகளுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

 இந்திய தர  விவரங்கள் அடங்கிய  தயாரிப்புகளின் பட்டியல் முதல்வரிடம் வழங்கப்பட்டது. உரிமதாரர்களும் கலந்துரையாடலின் போது பிஐஎஸ் உடனான தங்கள் புகழ்பெற்ற பயணம் குறித்து தெரிவித்தனர். பிஐஎஸ் ஹால்மார்க்கிங் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு புதுச்சேரியில் விற்கப்படும் நகைகளின் தரம் எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மதிப்பீட்டு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தின் பிரதிநிதி முதல்வரிடம் கூறினார். தகவல்களை முதல்வர் பொறுமையாகக் கேட்டறிந்தார், இந்த விஷயத்தில் தனது அரசாங்கம் பிஐஎஸ்-க்கு எப்போதும் முழு ஆதரவை வழங்கும் என்று கூறினார். முதல்வரைச் சந்தித்த பிறகு, குழுவினர் கேட்டதற்கிணங்க, தன பொன்னான நேரத்தை ஒதுக்கி, தூதுக்குழுவின் கருத்துக்களைக் கேட்டதற்காக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். புதுச்சேரியின் மாண்புமிகு முதல்வர் எப்போதும் தரநிலைகள் மற்றும் தரத்தை ஆதரித்து வருகிறார், மேலும் முன்னதாக புதுச்சேரியில் நடைபெற்ற BIS உலக தரநிலைகள் தினம் 2024-க்கு தலைமை விருந்தினராகவும், ஜனவரி 06, 2025 அன்று BIS நிறுவன தினத்தை முன்னிட்டு BIS மற்றும் நுகர்வோர் மற்றும் தொழில்துறைக்கு அதன் சேவை குறித்த பாராட்டு வீடியோவையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.