இந்தியா – ஆஸ்திரியா நாடுகளிடையேயான பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆஸ்திரியா சென்றார். வியாழக்கிழமை அன்று நடைபெற்ற நிதித்துறை பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆஸ்திரிய நாட்டு நிதியமைச்சர் மார்கஸ் மார்டர்பவர் மற்றும் அந்நாட்டின் நிதித்துறைச் செயலாளர் பார்பரா ஈபிங்கர்-மைடில் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆஸ்திரியாவுடனான பொருளாதார மற்றும் நிதி சார்ந்த உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக நிர்மலா சீதாராமன் ஆஸ்திரியா சென்றார்.
ஏற்றுமதி சார்ந்த பொருளாதார நாடாக, ஆஸ்திரியா எப்போதும் வளம் மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளதாகவும் பொதுவான சர்வதேச விதிமுறைகளை பின்பற்றும் நாடாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் செயலாற்றவும் அந்நாடு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் புவிசார் அரசியல் நிலை, வரலாற்றுத் தொடர்புகள்,பொருளாதார வலிமை ஆகியவற்றில் இந்தியாவின் நம்பகத்தன்மை வாய்ந்த நாடாக உள்ளது. “அமெரிக்காவின் சுங்கம் மற்றும் வர்த்தகக் கொள்கை ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரியபொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. இது அனைத்து கூட்டு நாடுகளுடனும்பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வரும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நிலையான சூழல்களின் அடிப்படையில் நடைபெறும் வர்த்தகங்கள் வாயிலாக இரு நாடுகளும் பயனடைய முடியும் என்று ஆஸ்திரிய நிதி நிதியமைச்சர் மார்கஸ் மார்டர்பவர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள், அரசியல் சூழல்கள் குறித்தும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். தேசிய முதலீடு, உள்கட்டமைப்பு நிதியம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீடு, வர்த்தக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள், மின்சாரப் போக்குவரத்து, செமிகண்டக்டர் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையே, குறிப்பாக நிதிசார் தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் அவர் இதில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா போன்ற விரைவான பொருளாதார வளர்ச்சிக் கண்டு வரும் நாடுகளுடன் இணைந்து செயல்படுவது வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. டிஜிட்டல்,நிதிசார் தொழில்நுட்பத் துறைகளில், நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் கட்டமைப்புகளை ஒன்றிணைந்து உருவாக்க முடியும்” என்று ஆஸ்திரிய நிதி அமைச்சக செயலாளர் பார்பரா ஈபிங்கர்-மிடில் கூறியுள்ளார்.