இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது இளம் தலைமுறையினரின் பொறுப்பு

புதுச்சேரியில் உள்ள இந்திய அரசின் மத்திய மக்கள்தொடர்பகம் மற்றும் முதலியார் பேட்டை அன்னை சிவகாமிஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியன இணைந்து இன்று(31.10.2022) பள்ளிவளாகத்தில் தேசிய ஒற்றுமை தின சிறப்பு நிகழ்ச்சியைடத்தின. 

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் (பொறுப்பு) திரு. ஜெ.செம்பியன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்டஅலுவலர் திருமிகு .கௌரி வரவேற்புரை ஆற்றினார்.

மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் முனைவர்தி. சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார். இந்தியா விடுதலைபெற்றபோது 565 தனித்தனி சமஸ்தானங்கள், சிற்றரசுகள்இருந்தன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார்வல்லபாய் பட்டேல்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுஅவற்றை இணைத்து இந்தியா என்ற தேசத்தை உருவாக்கினார். அவரது பிறந்த தினத்தை இந்திய அரசு 2014 முதல் தேசியஒற்றுமை தினமாகக் கொண்டாடுகின்றது. இந்தியாவின்ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பது இளம்தலைமுறையினரின் பொறுப்பாகும் என்று சிவக்குமார் தனதுஉரையில் குறிப்பிட்டார்.

துணை இயக்குநர் சிவக்குமார் தலைமையில் மாணவிகள்தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தலைமை ஆசிரியை தமிழரசி,  உடற்கல்வி ஆசிரியைபி.வளர்மதி உள்ளிட்ட  ஆசிரியர்கள், மாணவிகள் நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர். வல்லபாய் பட்டேல் குறித்த விழிப்புணர்வுபிரசுரம் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிறைவில் களவிளம்பர உதவி அலுவலர் திரு.எஸ்.வீரமணி நன்றி கூறினார்.

பின்னர் நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகளின்விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாணவிகள் பள்ளிவளாகத்தைச்  சுத்தப்படுத்தினர்.

  தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளிமுதல்வர் (பொறுப்பு) ஜெ.செம்பியன் கொடியசைத்து துவக்கிவைக்கிறார். அருகில் மத்திய மக்கள் தொடர்பக துணைஇயக்குநர் முனைவர் தி. சிவக்குமார் உள்ளார்.

மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார் வல்லபாய் பட்டேல் குறித்த விழிப்புணர்வுபிரசுரத்தை மாணவிகளுக்கு வழங்குகிறார்.

மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார் தலைமையில் மாணவிகள் தேசிய ஒற்றுமை தினஉறுதிமொழி ஏற்கின்றனர்.