நாட்டின் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும்அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும், பாடுபட்டபல்வேறு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்இருந்ததாகவும் அவர்கள் அனைவரின் முயற்சியின்காரணமாகவே நாட்டில் விடுதலை சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார்.
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசின்மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சிவிருதுநகரில் இன்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியில்முதன்மை உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் திருமேகநாதரெட்டி, தங்களது தொழில், சொத்துக்கள், வருவாய், உள்ளிட்ட பலவற்றில் இந்த நாட்டிற்காக தியாகம்செய்தவர்கள் பலர் இருந்ததாகவும் அவர்களைப் பற்றிதெரிந்து கொள்ள வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும் கூறிய அவர், இந்த காரியத்தை நிறைவேற்றவே மத்தியஅரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இத்தகையபுகைப்படக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக்கூறினார். 1947ஆம் ஆண்டு பல்வேறு இன்னல்களுக்கு பிறகுநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த்து என்பதை நாம்அனைவரும் அறிவோம். ஆனால், அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஒரு மாபெரும் படையைத்திரட்டி, பிரிட்டிஷாரின் நிம்மதியை கெடுத்த பெருமை வேலுநாச்சியாரையே சேரும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கும்50 ஆண்டுகள் முன்னதாகவே, வேலூரில் பிரிட்டிஷாரைஎதிர்த்து சிப்பாய் கலகம் நடைபெற்றதையும் நாம் நினைவில்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்துவீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி போன்ற பல சுதந்திரபோராட்ட வீரர்களின் முயற்சியால் இந்தியா விடுதலை பெற்றது
குறித்து எடுத்துரைத்த அவர், இத்தகையதியாகிகள் குறித்து இன்றைய மாணவ மாணவியர்கள்அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்ன பிற காரணங்களைவிட, மிக முக்கியமான தேவை ஒற்றுமை என்று குறிப்பிட்டமாவட்ட ஆட்சியர் திரு மேகநாதரெட்டி, இலங்கை போன்றநாடுகளின் வீழ்ச்சியை ஒற்றுமையின்மைக்கு உதாரணமாகஎடுத்துரைத்தார்.
நாட்டிற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில்விருதுநகர் மண்ணிலிருந்து ஏராளமான தியாகிகளும்இருப்பதாக குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர், இந்த மண்ணில்மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்துள்ள புகைப்படகண்காட்சி அவர்களைப் பற்றி அறிய ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார். இந்தக் கண்காட்சியைஅனைவரும் கண்டு பயனடையவேண்டும் என்று அவர்கேட்டுக்கொண்டார்.
வரும் 4ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளஇக்கண்காட்சி விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்டஆட்சியர் திரு மேகநாதரெட்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய சென்னை பத்திரிகைதகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திருஎம் அண்ணாதுரை, நாட்டின் விடுதலைக்காக ஒவ்வொருபகுதியிலும் ஏராளமானோர் பாடுபட்டுள்ளதாகவும்அவர்களில் பெரிதாக அறியப்படாதவர்களை பற்றிஅறிந்துகொள்வதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாககூறினார்.
ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்திவருவதாகவும், அவை குறித்து மக்கள் அறிந்து கொண்டுபயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும்அடுத்தவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றநோக்கத்திலும் இதுபோன்ற கண்காட்சிகள்நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் பாடநூல்கள் மட்டுமின்றி, பிற நூல்களையும்படிக்க ஆர்வம் காட்டவேண்டும் என்று அறிவுறுத்திய அவர்,இதன் மூலம் பன்முக அறிவாற்றல் ஏற்படும் என்று கூறினார்.
முன்னதாக நோக்க உரையாற்றிய மத்திய மக்கள்தொடர்பகத்தின் இயக்குனர் திரு ஜெ காமராஜ், விருதுநகரில் உள்ள அனைவரும் இந்த கண்காட்சியைபார்த்து பயனடையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை மத்திய மக்கள் தொடர்பக கள உதவிஅலுவலர்போஸ்வெல் வரவேற்புரை ஆற்றினார்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சிநடைபெறும். மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின்மத்திய மக்கள் தொடர்பகத்தின் மதுரை அலுவலகங்கள், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து இந்தபுகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள்நலத்திட்டம், விருதுநகர் மாவட்ட சமுகநல அலுவலகம், விருதுநகர் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன்ஓவர்சீஸ் வங்கி. விருதுநகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்ஆகியவை இந்த கண்காட்சிக்கான அரங்குகளை அமைத்துள்ளன.