வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் டீன்-மாணவர் நலன் அலுவலகம், ‘வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடையே குறும்படம் மற்றும் நாடகப் போட்டிகளை நடத்தியது.

பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் மீடியா துறை, கலைநிகழ்ச்சித் துறை மற்றும் சுற்றுலாக் கல்வித் துறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ரொக்கப் பரிசுகளைப் பெற்றனர்.

இந்த குறும்படங்கள் மற்றும் நாடகங்கள் சமூகத்தில் நடக்கும் ஊழலின் பல்வேறு பரிமாணங்களை பிரதிபலித்தன. மேலும் பல்கலைக்கழகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுச்சேரி அரசு, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். பாஸ்கரேன், பேராசிரியர் திரு ராஜீவ் ஜெயின், சிறப்புப் பணி அதிகாரி, கலாச்சாரம் மற்றும் கலாச்சார உறவுகள் இயக்குநரகம்  உரை நிகழ்த்தினார். பின்னர் இருவரும் இணைந்து வெற்றி பெற்ற மற்றும் ரன்னர் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வின் முடிவில் மாணவர்கள் நலத்துறை துணை டீன் திரு சிபி நன்றி கூறினார்.