சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மஸ்கட்டிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
1962 சுங்கத்துறை சட்டத்தின் கீழ் 3,000 கிராம் எடையுடைய 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்த புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலிவெளியிட்டுள்ளார்.