சணல் தொழில், இந்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள முக்கியதொழில்களில் ஒன்றாகும். தங்க இழை என்று அழைக்கபடும் சணல், இயற்கையான, புதுப்பிக்கத்தக்க, மக்கும் மற்றும் ‘பாதுகாப்பான’ பேக்கேஜிங்கிற்கானஅனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கிறது. தேசியசணல் வாரியம், சணல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிமற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் / ஊக்குவிப்பு திட்டங்களை மேற்கொள்கிறது .
தேசிய சணல் வாரியம் (NJB), சென்னை கீழ்கட்டளையில் உள்ள “ஸ்ரீ சைதன்யா டெக்னோஸ்கூல்” மாணவர்களுக்கு சணல் நட்சத்திரமதிப்பீடுவுடன் கூடிய சணல் பைகளை 7- டிசம்பர்’22 அன்று விநியோகித்தது மற்றும் ஸ்வச்சதா அபியான்செயல்களை ஏற்பாடு செய்தது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சணல் நட்சத்திரமதிப்பீடு முத்திரை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்காக, NJB (Chennai), 1,000 சணல் பைகளை இலவசமாக (சணல்நட்சத்திர மதிப்பீடு முத்திரைவுடன் அச்சிடப்பட்டது) விநியோகிக்க பட்டது. “சணல் நட்சத்திர மதிப்பீடு முத்திரை” இந்திய சணல் தயாரிப்புகளைமேம்படுத்துவதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் இந்தியஅரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஒரு புதிய முயற்சிஆகும்.
திரு.T. அய்யப்பன், மார்க்கெட்டிங் தலைவர், தேசியசணல் வாரியம், கொல்கத்தா & சென்னை, நிகழ்ச்சிக்குதலைமை தாங்கி, அனைத்து மாணவர்களுக்கும் சணல்பைகளை (சணல் நட்சத்திர மதிப்பீடுவுடன்) 7-டிசம்பர்’22, திருமதி பி.சசிரேகா, முதல்வர், ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி. முன்னிலையில்வழங்கினார். இந்நிகழ்வின் போது, ஸ்வச்சதா அபியான்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சுகாதார சாதனங்கள்அடங்கிய பெட்டி இலவசமாக வழங்கப்பட்டது மற்றும்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதும் செய்யப்பட்டது.
திரு.T.அய்யப்பன், இந்தியா முழுவதும் ஒருமுறைபயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, “ஒருமுறைமட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை” பயன்படுத்துவதை தவிர்க்கவும், எதிர்கால சந்ததியினரைகாப்பாற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பைகளைபயன்படுத்தவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருமதி . பி.சசிரேகா, முதல்வர், சைதன்யா டெக்னோபள்ளி, சணல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அனைத்துஏற்பாடுகளையும் செய்திருந்தார்.