உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை (14.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து 23 தங்கக்கட்டிகள், 6 தங்க மோதிரங்கள் உட்பட ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த விமானப்பயணி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு. எம் மேத்யூ ஜாலி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
