மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி

மத்திய  அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் அரியலூரில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி இன்று 02.03.2023 தொடங்கியது.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பான புகைப்படக்கண்காட்சியை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரமணசரஸ்வதி,  தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார் மாணவர்களின் லட்சியங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

நிகழ்ச்சியில் நோக்கவுரை ஆற்றிய மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல இயக்குனர் திரு காமராஜ், மாணவர்கள் கல்வி கற்கும் போதே நம் எதிர் காலத்  திட்டத்தை முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

திருச்சி மண்டல மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலர்திரு.கே. தேவி பத்மநாபன் வரவேற்புரை ஆற்றினார்.

அரியலூர் சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் காமராஜ், அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் மலர்விழி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி  அன்பரசி மற்றும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்நிகழ்ச்சியின்இறுதியில் திரு ரவிந்திரன் தஞ்சாவூர் கள விளம்பர உதவியாளர் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டஇதில் சித்தா, அஞ்சல் துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை, கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் போன்ற துறைகளில் அரங்கங்கள் இடம் பெற்றன. இந்த புகைப்பட கண்காட்சி மார்ச் 4-ம் தேதி வரை  நடைபெறும்.