நிலையான ஆற்றல் மேலாண்மை மற்றும் நவீன சேகரிப்பு முறைகள் எனும் தலைப்பில் ஒரு வாரபயிலரங்கம் புதுவை பல்கலைக்கழகத்தில் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்துறை சார்பில்நடத்தப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிதுறையின் நிதி நல்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவின் 8 மாநிலங்களில் இருந்தும் 2 வெளிநாடுகளில் இருந்தும் வல்லுனர்கள் கலந்து கொண்டு விரிவுரை மற்றும் செய்முறை பயிற்சிகளையும்வழங்கினர். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய மாநில பல்கலைக்கழகங்களில் இருந்து பொருள்அறிவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப துறைகளை சார்ந்த 25 ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் தொடக்க உரையாற்றிய புதுவை பல்கலைக்கழக இயக்குநர் பேரா. க. தரணிக்கரசு “ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கு ஆற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு படிம எரிபொருள்வளங்கள் நிலையற்ற தன்மை கொண்டது என்றும் உலக வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கும்” என்றும்குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் பயன்பாடு நாட்டின் ஆற்றல் தேவைகளைமுழுமையாக பூர்த்தி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வருகிற 2040 தோடு தற்போது உள்ளவர்த்தக ஆற்றல் வளங்களான கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயு போன்றவற்றின் பயன்பாடுமுடிவுக்கு வரும் என்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்ப கட்டமைப்பு மட்டுமே உலகவெப்பமயமாதலை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.
இந்த பயிலரங்கின் நோக்கமே நாட்டின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பை பாதிக்காத வகையில்நிலையான ஆற்றல் பயன்பாடு மற்றும் மேம்பாட்டை அடைவதற்கான வழிகளை கண்டடைவதுதான்என்றும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதுமட்டுமே நிலையான எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு என்றும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் பேராகார்த்திக் செல்வக்குமார் தெரிவித்தார். நிகழ்வில் நிரைவுறை ஆற்றிய பல்கலைக்கழக பதிவாளர் பேராரஜ்நீஷ் புட்டானி “புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் செயல்திறன் தற்கால பருவநிலை மாற்றத்தால் பெருமளவுபாதிப்புக்கு உள்ளாகும் என்றும் இது போன்ற பயிலரங்குகள் இத்தகைய சூழ்நிலையை சமாளிக்கவும்எதிர்கொள்ளவும் வியூகங்கள் வகுக்கும் என்று பேசினார். நிகழ்வில் வாழ்த்துரை வழங்கியபல்கலைக்கழக நூலகர் பேரா. விஜய குமார் பேசுகையில் “அதிக படிம எரிபொருள் பயன்பாட்டால்ஏற்படும் மாசு மற்றும் பருவ நிலை மாறுபாடு ஆகியவற்றின் எதிர்மறை தாக்கத்தை எதிர்கொள்ளும்உலகிற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதுபோன்ற பயிலரங்கு உணர்த்துகிறது” என்றார். எவ்வித சமரசமுமின்றி தற்கால தலைமுறையின்தேவைகளை பூர்த்தி செய்வதோடு நிலையான எதிர்காலத்திற்கான துரவுகோலாக புதுப்பிக்கத்தக்கஎரிபொருள் ஆற்றல் பயன்பாடு இருக்கும் என்றும் பேசினார். முன்னதாக பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் பேரா. அருண்பிரசாத் அனைவரையும் வரவேற்றார். இந்தப் பயிலரங்கில் நிலையானஆற்றல் சேமிப்பு முறைகள், சூரியசக்தி அணுக்களின் தற்போதைய நிலை மற்றும் சவால்கள், ஜலவாயுதயாரிப்பு, ஆற்றல் கட்டமைப்பு ஒருங்கிணைப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு, அதிர்வலைஆற்றல் சேகரிப்பு, காற்று ஆற்றல், கலப்பு ஆற்றல் ஆகிய தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகளும்செயல்முறை விளக்கமும் வழங்கப்பட்டது. இப்பயிலரங்கு கல்விபுலத்தில் இயங்கும் ஆய்வாளர்களுக்கும்அரசின் கொள்கையாளர்களுக்கும் ஒரு சிறந்த பாலமாக இருந்து தன்னிறைவு பெற்ற நிலையான ஆற்றல்பயன்பாடு மற்றும் சேமிப்பில் முதன்மையாக திகளும் நாடாக இந்தியா வளர ஒரு சிறு முயற்சியாகும்.