தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ள வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்  சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் 
பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 0.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் ஏரிக்கரையை ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி பணிகளை தொடங்குவது தொடர்பாகவும், அதனை தொடர்ந்து, அகரம், ஜெகந்நாதன் தெருவில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொளத்தூர் மறுவாழ்வு மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையத்தினையும்(Kolathur Dialysis Centre), அதன் அருகாமையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் பன்னோக்கு மையத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் (Co-working Space) பகிர்ந்த பணியிட மையத்தையும், அதனை தொடர்ந்து, வால்டாக்ஸ் ரோடு, சௌகார்பேட்டை, தண்ணீர் தொட்டி தெருவில் CMDA சார்பில் ரூ.129.05 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய 700 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கானஇடத்தினையும், அதனை தொடர்ந்து, ஜார்ஜ் டவுன், பிராட்வே ரோடு, பி.ஆர்.என். கார்டனில்வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.85.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய 504 குடியிருப்புகளுக்கான இடத்தினையும் மற்றும் இராயபுரம், 60ஆவது வார்டு, கிளைவ் பேக்டரி, 234 குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளையும்ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது : “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு வடசென்னை மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தினை கடந்த 14.03.2024 அன்று சென்னை, தங்கசாலையில் அறிவித்து தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்தமாக சுமார் 5,780 கோடி ரூபாய் செலவில் 225 பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து, அதில் 100-க்கும் மேற்பட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 28 பணிகளை 685 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு இருக்கின்றது. மற்ற துறைகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒட்டுமொத்தமாக இந்த வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் சுமார் 1,613 கோடி ரூபாய் ஒதுகீடு செய்து அந்த பணிகளை துரிதப்படுத்துகின்ற நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 26.08.2024 அன்று கொளத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வண்ண மீன்கள் சந்தைக்கு அடிக்கல் நாட்டினார்கள். அதோடு சேர்த்து கொளத்தூர், ரெட்டேரி மற்றும் புழல் ஏரிகளை மேம்படுத்துவதற்காகவும், இராயபுரம் பகுதியில் ஒரு மாநகராட்சி சமுதாயக்கூடமும், திருவிக நகர் பகுதியில் சலவை கூடமும் என்று ஒட்டுமொத்தமாக ரூபாய் 115.58 கோடி செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள். இன்றைக்கு அந்த பணிகளை துவக்குகின்ற வகையில் எங்கள் துறையினுடைய செயலாளர் அன்பிற்கினிய திருமதி. காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்களும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் திரு.அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்களும், பெருநகரத்தினுடைய மாண்புமிகு மேயர் அவர்களும், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்களும் மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் என ஒருங்கிணைந்து இன்றைக்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.

சென்னையில் புதிதாக Co-working Space என்று சொல்லக்கூடிய பகிர்ந்த பணியிட மையம் ஒன்றை துவங்குவதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுடைய இந்த கொளத்தூர் தொகுதியில் மாண்புமிகு தளபதி அவர்களுடைய சீரிய சிந்தனையில் உருவான இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குண்டான கட்டிட வரைபட அமைப்புகளை இன்றைக்கு பார்வையிட்டோம். அதில் படிப்பதற்கு நல்ல போதுமான சூழ்நிலை இல்லாத மாணவச் செல்வங்களுக்கு படிப்பதற்குண்டான இடம், அதேபோல் வீட்டிலே இருந்து பணியாற்றக் கூடியவர்களுக்கு போதிய வசதியின்மை அவர்களின் பணிகளை நேர்த்தியாக செய்ய முடியாத சூழ்நிலை உள்ளவர்களுக்கும், அவர்களுக்கு பணி செய்வதற்கு உண்டான தளமும், அறமும் உருவாக்கப்பட இருக்கின்றன. அதை இன்று பார்வையிட்டோம் சிறு சிறு திருத்தங்களை துறையினுடைய செயலாளர் அவர்களும் மற்றவர்களும் எடுத்து கூறி இருக்கின்றார்கள். அந்த குறைகளை எல்லாம் கலந்து இந்த மாத இறுதிக்குள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய பொற்கரங்களால் இந்த Co-working Space என்று சொல்லக்கூடிய பகிர்ந்த பணியிட மையத்தை திறந்து வைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது“. இவ்வாறு மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.