சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் – பேரரசு ஆவேசம்

பி என் பி கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க  சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்,  தயாரித்துள்ள  படம்கடத்தல்” இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய இயக்குநர் பேர்ரசு “சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன் ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை, எனக்குச் சொல்லவே வலிக்கிறது. உலகமே கொண்டாடிய இசை மேதை ஜீனியஸ் தாழ்த்தப்பட்டவர், அவர் காலில் விழுந்து வணங்கவில்லையா,  வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் ஜாதி என்ன என கேட்பவன் இயக்குநரே இல்லை. சிறுபான்மையினர் ஜாதி மதம் இதையெல்லாம் சினிமாவில் கலக்காதீர்கள்.**^****

இப்படி ஆரம்பித்தால் தேவர் மகன் கவுண்டர் மகன் என படம் வரும் தனித்தனி ஜாதி குழுக்கள் வரும். அதையெல்லாம் குறை சொல்லவில்லை. ஜாதிப்படம் வரட்டும் ஜாதிப்பெருமை பேசட்டும் ஆனால் அடுத்தஜாதியைக் குறை சொல்லாதீர்கள். தேவர் மகன் ஜாதிப்பெருமை பேசிய படமா அது  தேவர் ஜாதிக்குள் நடந்தகதையைச் சொன்ன படம், உண்மையில் தேவர் ஜாதியினர் தான் அந்தப்படத்தைத் திட்ட வேண்டாம் ஏனெனில்அவர்களைக் காட்டுமிராண்டி கூட்டம் என்பார் கமல், சிவாஜி அதை மறுத்துப் பேசமாட்டார் அந்தப்படத்தில்ரேவதி யார் ?, தாழ்ந்த ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் பண்ணியதை பற்றி யாரும் பேசவில்லை. இது போலமுன்பு நடந்த கதையை இப்போது பேசி பிரச்சனை ஆக்காதீர்கள்.  சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் ஜாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்பட குழுவினர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவதுபேரரசு பேசும்போது ஜாதிப்படங்கள் வெண்டாம் என்றார் ஜாதிப்பிரச்சனை வேண்டாமே அதை நம் வீட்டுக்குள்வைத்துக்கொள்வோம் நாட்டுக்குள் வேண்டாம் அதிலும் ஜாதிப்பிரச்சனையை உங்கள் வலியைச் சொல்லுங்கள்ஆனால் அடுத்தவருக்கு வலியை ஏற்படுத்தாதீர்கள் என்றார்.  இன்னும் பழங்கதையைப்பேசிக்கொண்டிருக்காதீர்கள். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து காமராஜர் செய்து தந்த பல திட்டங்கள்வழியே, பலர் முன்னேறி விட்டார்கள் 70 சதவீதம் பேர் முன்னேறி, பல பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் 30 சதவீதம்  பேர் இன்னும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் அவர்களும் மேலே வர வேண்டும் அதற்காகஅதையே பேசி பிரச்சனையாக்காதீர்கள். அம்பேத்கர், கலைஞர் எல்லோரும் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தார்கள், அது மாதிரி எல்லோரும் வரட்டும். பழங்கதை பேச வேண்டாம், சினிமாவில் இருக்கும் பிரச்சனையை பேசுவோம்100 ரூபாய் டிக்கெட் 200 ரூபாய் அதைப் பேசுவோம். சில நாட்களாக விஜய் படங்களில் நடிக்க மாட்டார் எனநியூஸ் வருகிறது அவருக்கு நார்மலான வயது தான் அவர் தமிழர் அவர் தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும், அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார், அரசியலும் செய்யட்டும் ஆனால் சினிமாவில் தொடர்ந்துநடிக்கட்டும். சினிமா இப்போது கஷ்டத்தில் இருக்கிறது, ஒரு குடும்பம் தியேட்டருக்கு போனால் 1000 ரூபாய்செலவாகிறது அதை அமைச்சர் உதயநிதி போன்றவர்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமாவைஇன்னும் ஒரு தொழிலாக மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை அதையெல்லாம் பாஜாகவில் சேர்ந்த சினிமாதுறை நண்பர்கள் கோரிக்கை வைத்து மாற்ற வேண்டும். கடத்தல் இந்தப்படத்தில் குழந்தைக்கடத்தல் பற்றிஒரு நல்ல விசயத்தைச் சொல்லியுள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிதரன் பேசியதாவது அனைவருக்கும் வணக்கம், கடத்தல் இயக்குநர் சலங்கை துரை நிறையப் போராடி இந்தப்படத்தைஎடுத்ததாகச் சொன்னார்கள், இந்தக்காலத்தில் படமெடுப்பது மிகக்கடினமாகத் தான் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் பல வேலைகளை முன்னெடுத்து வருகிறோம். புதுத் தயாரிப்பாளர்களுக்கு வாராவாரம்எங்கள் சங்கத்தில் கவுன்சிலிங்க் கொடுத்து வருகிறோம். சினிமா ஒரு அழகான கலை, நிறையத்தயாரிப்பாளர்கள் வர வேண்டும், தயாரிப்பாளருக்குப் பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி வருகிறோம். சினிமாதியேட்டர்களில் இருப்பது தான் என்றும் நல்லது. சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தாருங்கள் மக்களிடம்முடிவை விடுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தப்படம் வெற்றி பெற அனைவருக்கும்வாழ்த்துக்கள், நன்றி

புதிய தயாரிப்பாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த அளவு உதவிகரமாக இருப்பது மகிழ்ச்சியாகஉள்ளது , சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பல ஆதரவு இருப்பதாக இதிலிருந்து தெரிகிறது , இதுவே படத்தின்வெற்றியைப் பிரதிபலிக்கிறது , சிறு படங்களுக்குப் பத்திரிக்கையாளர்கள் தான் ஆதரவு தர வேண்டும்கண்டிப்பாக தியேட்டருக்கு இந்தப் படத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் நன்றி.

ஒளிப்பதிவுராஜ்செல்வா இசை – M.ஸ்ரீகாந்த்     பாடல்கள்பாவலர் எழில் வாணன்,இலக்கியன்,  சக்தி பெருமாள்.  எடிட்டிங் – AL.ரமேஷ்     சண்டை பயிற்சி  குங்ஃபூ சந்துருநடனம்ரோஷன் ரமணா   

தயாரிப்பு மேற்பார்வைமல்லியம்பட்டி  மாதவன். மக்கள் தொடர்பு  மணவை புவன்  நிழற்படம்தஞ்சை ரமேஷ் டிஸைன்ஸ்விக்னேஷ் செல்வன்  இணை தயாரிப்பு – M.R. தாமோதரன்ரமேஷ் விஜயசேகர். தயாரிப்புசெங்கோடன் துரைசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிருக்கிறார்சலங்கை துரை.