திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், P-3 வியாசர்பாடிகாவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்திரு.M.D.K.சுரேஷ் குமார் (த.கா.36538), முதல்நிலைக்காவலர் M.செந்தில்குமார் (மு.நி.கா.45273), ஆயுதப்படைகாவலர் L.சிவகுமார் (கா.55075) மற்றும் ஊர்க்காவல் படைவீரர் V.சதிஷ்குமார் (HG 5592) ஆகியோர் 15.7.2021 அன்றுஇரவு வியாசர்பாடிகள்ளுக்கடை சந்திப்பு அருகே வாகனதணிக்கை பணியிலிருந்தபோதுஅதிகாலை சுமார் 01.30 மணியளவில் (16.7.2021) ஒரு நபர் இருசக்கர வாகனத்தைஓட்டிக் கொண்டேமற்றொரு நபர் அமர்ந்திருந்தஇருசக்கர வாகனத்தை காலால் தள்ளி கொண்டுவரும்போது, காவல் குழுவினரை பார்த்ததும் இருவரும்இருசக்கர வாகனத்தை திருப்பி தப்ப முயன்றனர்உடனேகாவல் குழுவினர் துரத்திச் சென்றபோதுஇரு நபர்களில்ஒருவர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டுதப்பியோடவே, காவல் குழுவினர் மற்றொரு நபரைஇருசக்கர வாகனத்துடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர்பிடிபட்ட நபரையும்கைப்பற்றப்பட்ட இருசக்கரவாகனங்களையும் P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.

P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில்பிடிபட்ட நபர் தேவராஜ், வ/21, த/பெ.பார்த்திபன், எண்.11, அன்னை சத்யா நகர் 1வது தெருவியாசர்பாடிசென்னைஎன்பதும்தப்பிச் சென்ற நபர் அவரது கூட்டாளி விஸ்வா (எ) ஸ்கேல் என்பதும்இருவரும் சேர்ந்து இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில் காவலர்களைகண்டு தப்ப முயன்றபோது ஒருவர் பிடிபட்டதும்தெரியவந்ததுஅதன்பேரில், காவல் குழுவினர் தப்பிச்சென்ற விஸ்வா (எ) ஸ்கேல், த/பெ.துரைசாமி, எண்.11,அப்பு தெருசுந்தரம் மெயின் ரோடுவியாசர்பாடிசென்னை என்பவரை 16.7.2021 அன்று கைது செய்தனர்.

காவல் குழுவினர் இருவரையும் விசாரணை செய்ததில்இருவரும் சேர்ந்து வியாசர்பாடிசெம்பியம் ஆகியபகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதுதெரியவந்தது. அதன்பேரில்குற்றவாளிகளிடமிருந்துவிலையுயர்ந்த 3 இருசக்கர வாகனங்கள் உட்பட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் குற்றவாளி தேவராஜ் மீது P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 செல்போன்பறிப்பு வழக்குகள் உள்ளதும்குற்றவாளி விஸ்வா மீது D-1 திருவல்லிக்கேணி, T-9 பட்டாபிராம் மற்றும் N-1 இராயபுரம்காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வீடுபுகுந்து திருடியது தொடர்பாக வழக்குகள் உள்ளதும்தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுநீதிமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டனர்.

இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டுஇருசக்கர வாகனங்கள் திருடிய 2 குற்றவாளிகளை துரத்திச்சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த P-3 வியாசர்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர்சுரேஷ்குமார் தலைமையிலான காவல் குழுவினரைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால்இ.கா.ப., அவர்கள் இன்று (19.07.2021) நேரில்ழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.