தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும்பொருட்டு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகாலத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றும் சென்னைபெருநகர காவல் ஆளிநர்களின் நலனுக்காக சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், கொரோனாவிழிப்புணர்வு முகாம்கள், மருத்துவ முகாம்கள்நடத்தப்பட்டும், கொரோனா தடுப்பு உபகரணங்கள்வழங்கப்பட்டும் பல்வேறு நலத்திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., காவலர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலனுக்காக சென்னை பெருநகரில் உள்ள காவலர் குடியிருப்புகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், இத்திட்டத்தின் துவக்கமாக, 04.08.2021 அன்று மதியம், கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் , இ.கா.ப., துவக்கி வைத்தார்.
இம்முகாமில் கண், காது, தொண்டை, இரத்த அழுத்தம், நீரிழிவு, ECG மற்றும் ECHO உள்ளிட்ட மருத்துவபரிசோதனைகள் பெற்று கொள்ளவும், பரிசோதனை மற்றும்முடிவுகள் தொடர்பான விளக்கங்கள் அளிக்க சிறப்புமருத்துவர்கள் அமர்த்தப்பட்டும், சிறிய வகைநோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கவும்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், காவல் ஆளிநர்கள்மற்றும் அவரது குடும்பத்தினர் இம்முகாமில் கலந்து கொண்டுபரிசோதனை செய்து பயன்பெற காவல் ஆணையாளர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, கீழ்பாக்கம் காவல் குடியிருப்பில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடைபெறுகின்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை முகாமினைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப. அவர்கள் பார்வையிட்டு, காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இம்முகாமில், சென்னை பெருநகர காவல் கூடுதல்ஆணையாளர்கள் திரு.டி.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), திரு.பிரதீப்குமார், இ.கா.ப., (போக்குவரத்து), வடக்குமண்டல இணை ஆணையாளர் திரு.ஏ.டி.துரைகுமார், இ.கா.ப., துணை ஆணையாளர்கள், அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த பொது மேலாளர் சாய்நாராயணன், மேலாளர் தனுஷ்கோடி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.