அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘போர் தொழில்‘. அறிமுக இயக்குநராக இருக்கும் விக்னேஷ் ராஜா, அனுபவம்மிகுந்த இயக்குனராக படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் நகைச்சுவை நடிகர் இல்லை. காதல்கிளுகிளுப்புக்கு கவர்ச்சி நாயகிகள் என்று யாருமில்லை. குத்தாட்ட பாட்டில்லை. ஆனாலும் படம்போரடிக்கவில்லை. நாற்காலியின் நுனிப்பகுதியில் நம்மை உட்கார வைத்துவிட்டார் இயக்குநர். சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதையும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதையும்படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தின் அடுத்த காட்சியைஆவலுடன் எதிர்பார்க்குமளவுக்கு அருமையான திரைக்கதையை அழகுபடுத்தியிருக்கிறார். படத்தின்ஆரம்பம் முதல் கடைசிவரை கொலைக்குற்றவாளியை கண்டுபிடிப்பதுதான். ஒரு இடத்தில்கூட பிசிறுதட்டவில்லை. போலீஸ் அதிகாரிகளான சரத்குமாரும் அசோக் செல்வனும் தங்களது கதாபாத்திரத்தைநன்றாக உள்வாங்கி இருவரும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு நடித்துள்ளார்கள்.