குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படம் ‘இறுகப்பற்று’

பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிப்பில் சக்தி வெங்கட்ராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஶ்ரீ, விதார்த், மனோபாலா ஆகியோரின் நடிப்பில் உருவான குடும்பப்படம்இறுகப்பற்று‘.  விக்ரம் பிரபுவும் ஶ்ரீயும்கணவன் மனைவி. ஶ்ரீ மனோதத்துவ நிபுணர். விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்லும் தம்பதியினர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை ஒன்று சேர்க்கிறார் மனோதத்துவ நிபுணர் ஶ்ரீ. தனது கணவர் விக்ரம் பிரபு, தன்னை வெறுத்துவிட கூடாது என்பதற்காக அவரின் குறிப்பறிந்து அவருக்கு வேண்டியதை செய்து சந்தோஷத்துடன் வைத்திருக்கிறார். தனக்கு ஶ்ரீ செய்துவரும் பணிவிடைகள்எல்லாம் மென்பொருள் பொறியாளர்கள் உருவாக்கிய ஒரு மென்பொருள்தான் என்பது விக்ரம் பிரபுவுக்கு தெரியவருகிறது. கணவன் மனைவியின் நல்லுறவை மனித உணர்வுகள்தான் தீர்மானிக்க வேண்டுமேதவிர,  பொறியாளர்கள் உருவாக்கிய மென்பொருள் அல்ல என்று ஶ்ரீயிடம் வாதாடி பிரிந்து விடுகிறார் விக்ரம் பிரபு. அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்புதுதான் கதை. மனோதத்துவ நிபுணராக ஶ்ரீ அற்புதமாக நடித்துள்ளார். அமைதியான நடிப்பில் அசத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. படம்பார்த்துவிட்டு வெளியே வரும் தம்பதியினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சந்தோஷமாக வாழவேண்டும் என்ற மனநிலையோடுதான் வருவார்கள். வாழ்த்துக்கள் இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ்.