பிரபுதேவாவின் ‘பகீரா’வின் பெண்களை சந்திக்கவும்

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ளபகீராதிரைப்படம்ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மார்ச் 3, 2023 அன்று உலகம் முழுவதும்திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை குறிப்பாக சிறந்தமற்றும் நம் நாட்டில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகரான பிரபுதேவாவுடன்  நடித்தது பற்றியும் இதன்கதாநாயகிகள் பகிர்ந்து கொண்டார்கள்.**********

நடிகை காயத்ரி பகிர்ந்து கொண்டதாவது, “பிரபுதேவா சார் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒருவருடன்பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னை மாஸ்டருடன் நடன மாடஅனுமதிக்கவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான். இந்த படத்தில் பணிபுரிந்திருப்பது என்னுடையவழக்கமான பாணியில் இருந்து வெளியேறி இருக்கிறேன். ஆதிக் ஒரு வழக்கத்திற்கு மாறான இயக்குநராகஇருக்கிறார். அவர் ஒரு தனித்துவமான திறமை மற்றும் நல்ல படத்தொகுப்பு திறனைக் கொண்டவர். அதைநாங்கள் படப்பிடிப்பின் போது உணர்ந்தோம். அத்தகைய அற்புதமான குழுவில் ஒரு பகுதியாக இருப்பதில்நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ‘பகீராஅனைவருக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்காக இருக்கும்என்றார்.

நடிகை ஜனனி கூறுகையில், “பொதுவாக பெரும்பாலான படங்கள் சிக்கலான மற்றும் தீவிரமான வகையைச்சேர்ந்தவையாக இருக்கும். ஆனால், இதற்கு முன்பு நான் நடித்தப் படங்களை விட இது வித்தியாசமானது. பிரபுதேவா சார் ஒரு ஜெம். அவருடன் பணிபுரிந்திருப்பதன் மூலம் எனது நீண்ட நாள் கனவு நனவாகிஇருக்கிறது. அவர் இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும்பணிபுரிந்திருந்தாலும், அவர் செட்டில் மிகவும் பணிவாகவும் எளிமையாகவும் இருந்தார். ஆதிக் என்னை இந்தப்படத்திற்காக என்னை அணுகியபோது, எனது கதாபாத்திரம் திரையில் குறைந்த நேரமே வரும் எனவும், ஆனால்அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும்  குறிப்பிட்டார். இந்த படத்தில் இத்தனை ஹீரோயின்கள்இருந்தாலும் கேட்ஃபைட் இல்லை. என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநர் ஆதிக்கும் நன்றிஎன்றார்.

நடிகை சஞ்சிதா ஷெட்டி கூறும்போது, “பகீராஎனது கேரியரில் மிகவும் சிறப்பான படம். இந்த படத்தில்என்னையும் ஒரு பகுதியாக மாற்றிய பரதன் சார் மற்றும் ரவி சாருக்கு நன்றி. நேர்மறை எண்ணம் கொண்ட, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உள்ளவர்களின் தயாரிப்பு இது. படத்தில் பல ஹீரோயின்கள் இருந்தாலும், படப்பிடிப்பில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் முக்கியத்துவம்கொடுத்து கதையை மிக சிறப்பாக எழுதியிருக்கிறார் ஆதிக். பிரபுதேவா சார் இந்த படத்திற்காக வெவ்வேறுதோற்றங்களில் தோன்றுகிறார். மேலும், வெவ்வேறு எனர்ஜியையும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும்கொடுத்துள்ளார். இது தியேட்டர்களிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் எதிரொலிக்கும். நீங்கள் திரையில்பார்க்கும் கதாபாத்திரத்தால் influence ஆக வேண்டாம். இந்தத் திரைப்படம் 100%  பொழுதுபோக்கைக்கொண்டுள்ளது“.