பிரதீப் குமார் தயாரிப்பில் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்திக்கரன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே“. பல பெண்களோடு உடல் உறவு தொடர்பில் இருப்பவர் செந்தூர்பாண்டியன். தன்னோடு ஒன்றாக படித்த ப்ரீத்திக்கரணை அடைய வேண்டும் என்ற கெட்டநோக்கத்தில் அவரது வீட்டுக்கு செல்கிறார். செந்தூர் பாண்டியனின் கெட்ட நோக்கத்தை அறியாத பிரீத்திகரன் அவரோடு கடற்கரைக்கு செல்கிறார். மறைவான இடத்திற்கு சென்றதும் ப்ரீத்திகரனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். அதற்கு ப்ரீத்திகரன் உடன்பட்டாரா? இல்லையா? என்பதுதான் கதை. திரையரங்குகளில் நடக்கும் இளம் ஜோடிகளின் ஆபாச உரையாடல்களை குடும்பத்துடன் சென்று படத்தை பார்க்க முடியாது. தான்தோன்றித்தனமாக திரியும் இளஞ்சோடிகளுக்கு என்று எடுக்கப்பட்ட படம். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை உள்வாங்கி நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள் அவரவரது வாழ்க்கை அவரது கைகளிலேயே இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர். ஆண் நண்பர்களோடு பழகும் பெண்கள் அனைவரும. கெட்டவர்கள் அல்ல என்பதை இயக்குனர் இப்படத்தில் சொல்லி இருக்கிறார். ஆபாச உரையாடல்களை தவிர்த்திருக்கலாம்.