பிரதாப் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரிப்பில், இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் விஞ்ஞான பாதையில் உருவாகியுள்ள படம் “இரவின் கண்கள்“. வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின்இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “தம்பி பாப் சுரேஷ் வித்தியாசமான கதையைச் சொல்லியிருப்பது காணொளி முன்னோட்டத்தில் தெரிகிறது அவருக்கு வாழ்த்துக்கள். உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதில்லை என்கிறார்கள் ஆனால் அப்படிப் படமெடுத்தால் படம் ஓடாது. இப்போது படத்தில் கஞ்சா, பத்துப்பேர் தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் தான் வருகிறது.*********
இன்றைய காலகட்டத்தில் வாழ்வியலைப் படமாக எடுப்பது குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ஓடிடிவிற்றால் தான் படம் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஓடிடி உலகமெல்லாம் இருக்கக் கூடிய ஒரு தளம் அதில் படம் பார்ப்பவர்கள் இரவில் தான் பார்க்கிறார்கள் அவர்கள் அந்த இரவில் சில காட்சிகள் இருந்தால் தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரி காட்சிகள் படத்திலிருந்தால் தான் படம் ஓடிடி வாங்குகிறார்கள். பேரரசு படமெடுத்தால் இனி அது மாதிரி தான் படமெடுக்க வேண்டும். இன்றைக்கு வந்த ஆல்பம் பாடலில் அந்த மாதிரிமஜா காட்சிகள் இருக்கிறது. பெரிய ஹீரோக்கள் மாற வேண்டும், உணர்வுப்பூர்வமான படங்களில் நடிக்கவேண்டும். இப்போதுள்ள இயக்குநர்கள் நல்ல தரமான படங்களை எடுக்க முன் வாருங்கள். மாணவர்கள் மனதில் வக்கிரத்தைப் படங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு நடக்கும் குற்றங்கள் சினிமாவின்தாக்கம் இருக்கிறது. இரவின் கண்கள் திறந்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் அருமையாக இருக்கிறது, முதல்படம் போல் தெரியவில்லை, நல்ல அனுபவம் உள்ளது போல் உருவாக்கியுள்ளார்கள். படம் பெரிய வெற்றி பெறஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.*****