மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் மதுக்கடை வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து பிரேமலதா அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தலாமே?. அதை விட்டுவிட்டு கண் துடைப்பு நாடகமாக விளம்பரத்தில் கண்ணீரை வடிப்பதும், மறுபுறம் பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து தமிழ்நாட்டைப் போதை நாடாக மாற்றியது ஒன்று தான் திமுகவின் சாதனை ஆகும். மது விற்பனை ஒன்று மட்டும் தான் சாதனையே தவிர, தமிழகத்தில் முன்னேற்றமும், பாராட்டுவதற்கும் ஒன்றும் இல்லை என்பதை இந்த (மது விற்பனை) சாதனையை, வேதனையோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே தமிழக அரசு வீண் விளம்பரங்கள் மூலம் விளம்பரத்தைத் தேடாமல், ஒரே கையெழுத்து மூலம் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினாலே, தமிழகத்தில் இங்கு யாரும் போதையின் பாதையில் போக மாட்டார்கள். அதேபோல திமுக அமைச்சர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழ்நாட்டில் போதையை ஒழித்துவிடலாம். எனவே இதையெல்லாம் செய்யத் தவறிய தமிழக முதல்வர் அவர்கள் வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்பரத்தைத் தேடிக்கொள்கிறாரே தவிர, உண்மையில் மதுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை, சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இந்த அரசின் இரட்டை நிலைப்பாடு கண்டனத்துக்குறியது.