பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ் தொடர் பிப்ரவரி 28 ல் வெளியாகிறது

ஒரு பரபரப்பான மனதைக் கவரும் ஒரு க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி  காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின்  பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது, புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு,  பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு க்ரைம் திரில்லர் ஆகும். இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்கள் உட்பட லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் அடங்கிய ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்*******

சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.

மும்பை, இந்தியா—பிப்ரவரி 11, 2025—இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இன் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28 அன்று வெளியிடப்படவிருப்பதை இன்று அறிவித்துள்ளது. விருது வென்ற இந்தத் தொடரின் புதிய சீசனின் கதைக்களம், தமிழ்நாட்டில் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.  புஷ்கர்  (Pushkar) மற்றும்  காயத்ரி  ( Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு,  பிரம்மா ( Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில்,  கதிர் ( Kathir ) மற்றும்  ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க அவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர் மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோரும் மேலும்  (Lal, Saravanan, Gouri Kishan, Monisha Blessy, Samyuktha Vishwanathan, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Rini, Kalaivani Bhaskar, மற்றும் Ashwini Nambiar) மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ( Manjima Mohan and Kayal Chandran} ஆகியோரும் இணைந்து சிறப்பு வேடத்தில் தோன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியவேடங்களில் தோன்றி நடித்திருக்கிறார்கள். முதல் சீசனின்  அதிரடியான இறுதிக் கட்டத்தில் சிறையில் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கும் நந்தினி (ஐஸ்வர்யா) தோன்றும் காட்சியுடன் இந்த இரண்டாவது சீசன், அதே விறுவிறுப்புடன் தொடங்குகிறது, அதே சமயம் சக்காரி (கதிர்) ஒரு மர்மங்களால் சூழப்பட்ட வரலாற்றைக் கொண்ட கிராமத்தை சென்றடைகிறார். ஆனால் எதிர்பாராது நிகழும் ஒரு கொலையால் அந்த கிராமமும், கிராம மக்களும் அதிவேகமாகப் பரவும் இருண்ட சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள் இந்தத் தொடர் இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஆங்கில சப் டைட்டில்களுடன் ஒளிபரப்பாகிறது .

மனதை பதைபதைக்கச்செய்யும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, அதன் அழுத்தமான கதைக்களம் மற்றும் ஆற்றல் மிக்க உணர்ச்சிகரமான நடிப்பாற்றலுடன் ஒரு விறுவிறுப்பான கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. குடும்ப உறவுகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல் மற்றும் அச்சம் போன்ற உணர்வு பூர்வமான கருப்பொருள்களுடன் பின்னிப்பிணைந்த இந்த சீசனின் கதைக்களம் சிக்கல் நிறைந்த புதிரான காளிபட்டணத்தின் சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு மரணத்தைச் சுற்றி வலம் வருகிறது. மேலும் ஒரு புதிய மர்மத்தையும் கட்டவிழ்க்கிறது. அதே வேளையில் அதன் ஆழத்தில் மறைந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத விசயங்களையும் வெளிக்கொண்டு வருகிறது . மனித உளவியலின் ஆழங்களையும், மற்றவர்களுடனான தனிநபர்களின் முரண்பாடுகளையும் பிரதிபலிக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, பார்வையாளர்களை எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் திடுக்கிடும் மாற்றங்கள் நிறைந்த ரகசியங்கள் மற்றும் பொய்களால் சூழப்பட்ட ஒரு உலகத்திற்குள் கொண்டு சென்று இறுதி வரை அவர்களை இருக்கையின் ஒரு விளிம்பில் வைக்கிறது.

“பிரைம் வீடியோவில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகைப்பட்ட பார்வையாளர்கள் அனைவரோடும் ஒரு சேர ஒத்திசைந்து ஈர்க்கக்கூடிய கருத்தாழமிக்க அதை சமயம் உண்மையான உள்ளூர் கதைகளை உருவாக்குவதே எங்களின் இடைவிடாத முயற்சியாக இருக்கிறது அந்த வகையில் உள்ளூர் கதைகள் உலக அளவிலான மக்களை சென்றடைந்து , பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுக்களை சுழல் – தி வோர்டெக்ஸ் முதல் சீசன், பெற்றிருப்பது அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.,” என்று பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா, தலைவர் நிகில் மதோக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது “வால்வாட்சர் பிலிம்ஸ் உடனான இந்த வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கி, இந்த ஆரவாரமான தொடரின் இரண்டாவது சீசனை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். தங்கள் துறையில் தலைசிறந்த நிபுணர்களாக திகழும் புஷ்கர் மற்றும் காயத்ரி, இருவரும் மர்மம் நிறைந்த த்ரில்லர்- பிரிவில் கலாச்சாரப் பின்னணியோடு கதைகளை உருவாக்குவதில் விற்பன்னர்களாகத் திகழ்கிறார்கள் மேலும் இந்த இரண்டாவது சீசனும் எங்களின் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.