செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்கள் மகான் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும். மும்பை, இந்தியா— 24 ஜனவரி, 2022—இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளங்களில் ஒன்றான Prime Video இன்று கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் அதிரடிச் சித்திரமான மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது. லலித் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளின் கதைத் தொகுப்பாகும். மகான் படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நிஜ வாழ்க்கையில் தந்தை-மகனான சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10 முதல் Prime Video -இல் பிரத்தியேகமாக உலகளவில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
மகான் என்பது, தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, சித்தாந்த வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் சென்றதால் குடும்பத்தாரால் விலக்கப்பட்ட ஒருவரின் கதையே மகான். அவர் தனது லட்சியங்களை எட்டினாலும் தனது மகன் அருகாமையில் இல்லாதது அவரை வாட்டுகிறது. கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற தனது கனவு நனவானாலும், ஒரு தந்தையாக வாழ வாழ்க்கை அனுமதித்ததா? இந்தப் பரபரப்பான, அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இந்தக் கதை. இந்தியாவில் Amazon Prime Video-இன் கன்டென்ட் லைசன்சிங் துறைத் தலைவர் மனிஷ் மெங்கானி கூறுகையில், “Prime Video-இல் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் நாடகமான மகானின் உலகளாவிய ப்ரீமியரை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் திறமையான நட்சத்திரங்கள் பங்கேற்கும் மகான் திரைப்படம் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு கடினமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒரு கதை. லலித் குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் இணைந்து இந்த அதிரடி பொழுதுபோக்குச் சித்திரத்தை எங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார். “மகான் திரைப்படத்தை Prime Video-இல் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். முழுக்க முழுக்க ஆக்ஷன், நாடகம் மற்றும் உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையை உருவாக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் அற்புதமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர் மற்றும் எங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் Prime Video-இல் மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய பிரீமியர் மூலம் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”என்று தயாரிப்பாளர் லலித் குமார் கூறினார்.
Prime Video கேட்லாக்கில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் மகான் திரைப்படமும் இணைகிறது. இதில் மும்பை டைரீஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான்- செம காமடி பா, ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், தாண்டவ், பாதாள் லோக், மிர்சாபூர் சீசன்1 மற்றும் 2, தி ஃபர்காட்டன்- ஆசாதி கே லியே, சன்ஸ் ஆப் சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் 2, இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகிய Amazon Original தொடர்களும் இந்தியத் திரைப்படங்களான கூலி நம்பர். 1, குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, ஜெய் பீம், பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி, லா, சுபியும் சுஜாதாயும், பென்குயின், வி சியூ சூன், நிசப்தம், சூரரைப் போற்று, பீமசேனா நளமஹாராஜா, திருஷ்யம்-2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளஸ்மெலடிஸ், புத்தம் புதுக் காலை, அன்பாஸ்டு ஆகியனவும், போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளும் அடங்கும். இவை அனைத்தும் Amazon Prime உறுப்பினர்களுக்குக் கூடுதல் கட்டணமின்றிக் கிடைக்கும். இந்தச் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உள்ளன. ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலியின் மூலம் Prime உறுப்பினர்கள் மகான் திரைப்படத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் காணலாம். Prime Video செயலியில், எபிசோடுகளைப் பதிவிறக்கம் செய்து மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எவ்விதக் கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் காணும் தேர்வும் Prime உறுப்பினர்களுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ₹1499 அல்லது மாதத்திற்கு ₹179 என்ற கட்டணத்தில் Prime உறுப்பினராக இணைவோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி Prime Video இலவசமாகக் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime -இல் மேலும் தகவல் பெறலாம் மற்றும் 30 நாட்கள் இலவச சோதனைக்குப் பதிவு செய்யலாம்.
AMAZON PRIME VIDEO குறித்து Prime Video ஒரு பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையாகும், இது PRIME உறுப்பினர்களுக்கு விருது பெற்ற Amazon Original தொடர்கள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் எளிதாகக் காணும் வசதியை வழங்குகிறது.PrimeVideo.com இல் மேலும் தகவல்களை அறியலாம். Prime Video-இல் காணக்கிடைப்பவை: ஷெர்ஷா, தூஃபான், சர்தார் உதாம், கூலி நம்பர். 1, குலாபோ சிதாபோ, சகுந்தலா தேவி, ஷேர்னி, துர்காமதி, சலாங், ஹலோ சார்லி, கோல்ட் கேஸ், நாரப்பா, சாராஸ், சர்பட்டா பரம்பரை, குருதி, #HOME, மற்றும் டக் ஜெகதீஷ் போன்ற பல மொழிகள் மற்றும் பகுதி சார்ந்த திரைப்படங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாராட்டப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மும்பை டைரிஸ் 26/11, தி லாஸ்ட் ஹவர், பாதள் லோக், பண்டிஷ் பண்டிட்ஸ், ப்ரீத், காமிக்ஸ்தான் செம காமெடிப் பா, ஃபேமிலி மேன், மிர்சாபூர், இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Amazon Original தொடர்களும் தி டுமாரோ வார், கமிங் 2 அமெரிக்கா,சிண்ட்ரெல்லா, போராட் சப்சிகியுவன்ட், வித்தவுட் ரிமோர்ஸ், அமெரிக்கன் காட்ஸ், ஒன் நைட் இன் மியாமி, டாம் கிளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், க்ரூயல் சம்மர், ஃப்ளீபேக், தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற ஆங்கிலத் திரைப்படம் மற்றும் தொடர்களும் PRIME மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக வரம்பற்ற ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கிறது. Prime Video ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலிமொழிகளிள் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. உடனடி அணுகல்: ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல கேமிங் சாதனங்களுக்கான Prime Video பயன்பாட்டில் எங்கும், எந்த நேரத்திலும் Prime உறுப்பினர்கள் இவற்றைக் கண்டுகளிக்கலாம். ஏர்டெல் மற்றும் வோடபோன் ப்ரீ-பெய்ட் மற்றும் போஸ்ட்-பெயிட் சந்தா திட்டங்கள் மூலமும் Prime வீடியோ நுகர்வோருக்குக் கிடைக்கிறது. Prime Video பயன்பாட்டில், Prime உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எபிசோட்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம். மேம்பட்ட அனுபவம்: 4K அல்ட்ரா HD- மற்றும் ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR)- இணக்கமான உள்ளடக்கத்துடன் தெளிவாகப் நிகழ்சிகளைக் காணலாம். IMDb ஆல் இயக்கப்படும் பிரத்யேக X-Ray அணுகல் மூலம் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் திரைக்குப் பின்னால் நடந்தவற்றைக் காணலாம். ஆஃப்லைனில் பின்னர் காண்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்களைச் சேமிக்கலாம். Prime உடன் கிடைப்பவை: ஆண்டுக்கு ₹1499 அல்லது மாதத்திற்கு ₹179 மட்டுமே செலுத்தி Prime மெம்பர்ஷிப் பெறும் வாடிக்கையாளர்கள் எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் Prime Video-ஐ பெறலாம். புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime இல் இது குறித்து மேலும் அறியலாம் மற்றும் 30 நாள் இலவசம் சோதனைக்குப் பதிவு செய்யலாம்.