ஆண்ட்ரூ லூயிசுடன் புதிய படத்தில் இணையும் லஷ்மண் குமார்

தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் வலுவான கதை அம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார்நடிகர் கார்த்தி நடித்து வெளியானசர்தார்திரைப்படம் வசூலில் சாதனை படத்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தகாரிதிரைப்படம்  ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, வெற்றி பெற்றது., இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.**********

கமர்சியல் வெற்றியான  கொலைகாரன்மற்றும் சமீபத்தில் வெளியான அமேசான் பிரைம் வெப் சீரிஸ்  வதந்தி  ஆகியவற்றை இயக்கி வெற்றிகளைக் கொடுத்தவர் ஆண்ட்ரூ லூயிஸ்பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இருவரும்  புதிய படத்திற்காககூட்டணி அமைத்துள்ளது  திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  இப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்வெளியாக உள்ளது.