பிரின்ஸ் வருண் தேஜ் நடிப்பில், கருணா குமார் இயக்கத்தில், பான்–இந்திய திரைப்படமாக உருவாகிறது“மட்கா”, டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா, வைரா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ரஜனி தல்லூரியின்எஸ் ஆர் டி என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து, இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின்படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. வருண் தேஜுவின் பிறந்தநாளைகொண்டாடும் விதத்தில், படத்தின் தயாரிப்பாளர்கள் “மட்கா” திரைப்படத்தின் அறிமுகத்தை, ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், படத்திலிருந்து ஆரம்ப காட்சி காணொளியை வெளியிட்டுள்ளனர். கிராமபோனில் கதாநாயகன் இசையை வாசிப்பதை காட்டும் காட்சியுடன் இந்தகாணொளி துவங்குகிறது. பின் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் கதாப்பாத்திரங்களைக்காட்டுகிறது. *******
இதில் நவீன் சந்திரா அடாவடிக்காரராகவும் , பி ரவிசங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். கதாநாயகனின் சிறுவயதுப் பகுதி அவன் கபடி விளையாடுவதைக் காட்டுகிறது, பின்னர் அவன் சூதாட்டமாஃபியாவின் தலைவனாகிறான். அவன் ஒரு சிகார் புகைத்துக்கொண்டு, யாரிடமோ போனில் ‘ப்ராமிஸ்’ என்று சொல்வதோடு வீடியோ நிறைவுபெறுகிறது.இந்த காணொளியில் வருண் தேஜ் முழுமையாகக் காட்டப்படவில்லை என்றாலும், மிகவும. சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, அவர் முழுமையான தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் என்பது புரிகிறது. அவரது ஆடை வடிவமைப்பு, 80களின் பாணியை ஒத்திருக்கிறது. வருண் தன் கவர்ச்சிகரமான நடிப்பு மற்றும் உட்ல் மொழியின் மூலம் திரையில் அசத்துகிறார். அவர் பேசும் ‘பிராமிஸ்’ என்ற ஒரே வார்த்தை, மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
1958 மற்றும் 1982 க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 50 களில் இருந்து 80 கள் வரையிலானசூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார். ஒளிப்பதிவாளர் A கிஷோர் குமார் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆஷிஷ் தேஜா புலாலா ஆகியோரின்திறமையில் கடந்த காலத்தின் அழகியல் திரையில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரின்பின்னணி இசை அற்புதம். தொழில் நுட்ப தரமானது, வெகு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த அறிமுகவீடியோ படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.