தன்ராஜ் இயக்கத்தில் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கன. நடித்திருக்கும் ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளி வெளியீட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, நெகிழ்வான தருணம். ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை. தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும் அப்பா கதை என்றாலே வாங்க கேட்ப்போம் பண்ணுவோம. என்று சொல்லி விடுவேன்.*******
வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்திருப்பவர்கள் சிறப்பாக படம் பண்ணிடுவாங்க தன்ராஜை அப்படி நம்பிஇந்த படத்துக்குள்ள வந்தேன். ஒவ்வொரு தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்குள் அவ்வளவு சிக்கல்கள் இருக்கு. இன்னும் 10 படம் கூடபண்ணலாம். தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. படபிடிப்பில்தான் முதல் முறையாம பார்த்தேன். என்னைப்பார்க்காமலே என் மீது நம்பிக்கை வைத்த தம்பி. மாபெரும் உறவோடு வந்து இருக்கிறார் வாழ்த்துகள் தம்பி.
இந்த படத்தை இயக்க தன்ராஜ் வேரொரு இயக்குநரை அழைத்து வந்தார். இந்த படத்தை எடுக்க ஒரு நல்ல இயக்குநரை கொண்டு வாருங்கள் என்றேன். இயக்குனர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொன்னார் நீயே படம் பண்ணுனு சொன்னேன் இயக்குனராக மாறி இருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இயக்குனர் பாலா பேசும்போது, ‘சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர். மற்றவர்களுக்குஉதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.