சென்னை புதுக் கல்லூரி பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சங்கமும், தமிழாய்வுத்துறையும் இணைந்து பேராசிரியர் முனைவர் முஹம்மது அலி எழுதிய “முஸ்லிம்களின் தமிழ் நாடகக் கருவூலம்”
என்ற நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் M.A. (Ex M.P.) வெளியிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பெற்றுக் கொண்டார். விழாவில் புதுக் கல்லூரி முதல்வர் முனைவர் பஷீர் அஹமது தலைமை தாங்கினார்.
தமிழாய்வுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் ரசாக் வரவேற்புரை நிகழ்த்தினார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சங்க தலைவர் பேராசிரியர் முனைவர்
ஷேக் அலாவுதீன் மற்றும் செயலாளர் பேராசிரியர் அஹமது மீரான் முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் குளச்சல் சாகுல் ஹமீது, பேராசிரியர் முனைவர் கம்பம் சாகுல் ஹமீது, பேராசிரியர் O.A. காஜா முஹைதீன் நூலாசிரியரை வாழ்த்தினார்கள். நிறைவாக பேராசிரியர் முனைவர் அ. சாகுல் ஹமீது நன்றியுரையுடன் விழா முடிந்தது. விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் அபுதாஹிர் தொகுத்து வழங்கினார்.