நாடகத் தந்தை என அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, ராஜேஷ், மனோபாலா, ஸ்ரீமன், பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.